பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 அனைத்துலக மனிதன. நோக்கி வற்றை வேருடன் களைய முற்படுகிறது. சுருங்கக் கூறுமிடத்து, மனிதனை மரணத்தின் பிடியிலிருந்து விடுவிக்க முயல்கிறது. இதற் கெதிராக, பழங்கால இந்தியா, ஆன்மாவைத் தேடிச் சென்ற முறை யில் ழரண மில்லாப் பெருவாழ்வாகிய கித்தியத்துவத்தின் இரகஸ் யத்தைக் கண்டு கூறியுள்ளது. ஆகவேதான் கிழக்கும் மேற்கும் ஒன்று சேராமல் இருந்தால் இரண்டும் மனமுடைந்து போக நேரும். அவைகள் ஒற்றுமை யடையும் மந்திரத்தை உபநிஷதங்கள் கூறி 'யுள்ளன. அறியாமை மரணத்தில் கொண்டுவிடு மென்றும், அறிவு கித்தியத்துவத்தில் கொண்டுவிடு மென்றும், விஞ்ஞானம் ஜட உல கிற்குத் தேவை என்றும், ஆண்டவனே அறிய ஆன்மீகம் தேவை என்றும் கூறியதே அந்த விடையாகும். கிழக்கும் மேற்கும் ஒற்று மைப்படுவது ஆன்மீக, விஞ்ஞான அறிவுகள் ஒன்றுபடுவதாகும். அவை ஒன்றுபடாத காரணத்தால்தான் கிழக்கில் வறுமையும் உயி ரற்ற தன்மையும், மேற்கில் அமைதி இன்மையும், துயரமும் இருக்து வருகின்றன. - - ஒற்றுமை என்பதும் ஒரே மாதிரியாக இருத்தல் என்பதும் வெவ்வேறு என்பதைப் புரிந்து கொள்ளாவிட்டால், என்னத் தவருகப் புரிந்து கொள்ள நேரிடும். வெவ்வேருக இருப்பவர்களே ஒற்றுமைப்பட முடியும். பிற நாட்டினுடைய சுதந்திரத்தை அழிக்கும் நாடுகள், ஒருவருக் கொருவர் நம்பி வாழும் வாழ்க்கையை அழிப்பவை. சாம்ராஜ்ய நாடுகள் மலேப் பாம்பைப் போலப் பிற காடுகளை விழுங்கி விடுகின்றன ; இவ்வாறு விழுங்குவதை ஒற்றுமை என்றுங் கூறுகின்றன. மனிதனுடைய உலகாயத அக்கறைகளே ஆன்மீகம் விழுங்கிவிடுமே யானுல், அதனே ஆன்மாவும் ஜடமும் கலந்த கலவை என்று கூற முடியாது. இவை இரண்டும் தனித் தனியேயும் ஆல்ை, ஒற்மையோடும் இருக்கும்பொழுதுதான் அதனைக் கலவை என்று கூற முடியும். எந்த விஷயங்களில் மனிதர்கள் தனியாக இருக்கிருர்களோ, அவற்றில் அவர்கள் தனித் தன்மைக்கு இடங் கொடுப்பது மூலந்தான், அவர்கள் ஒன்ரு' யிருக்கக்கூடிய விஷயங்களில் உண்மை ஒற்றுமையை நிலைநாட்ட (முதல்) உலகப் போர் முடிந்த அன்றிலிருந்தே சிறிய ஐரோப்பிய நாடுகள் சுய உரிமை கோரி வலியுறுத்தின. அன்றி லிருந்தே ஐரோப்பா அமைதியில் காட்டங் கொண்டது. ஐரோப் பாவில் தொடங்கப் போகிற புது யுகத்தில் மாபெருஞ் செல்வம், சாம்ராஜ்யங்கள், உடன்படிக்கைகள் ஆகியவற்றின் ஆற்றல்கள் தவிடு பொடியாகி, முடிவில் உண்மைச் சுதந்திரத்தின் அடிப் படையில் உண்மை ஒற்றுமை நிலைபெறப் போகிறது. புது யுகம் ,