பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வியின் பேதமின்மை: 289 தேசமும் விருந்தினர் மாளிகைகளை வைத்து வரவேண்டும். இம் முறையில் பார்த்தால் தேசீயக் கல்வி நிலையங்களே சிறந்த விருங் தினர் மாளிகைகளாகும். நம்முடைய அரசாங்கப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் வழங்கப்படும் கல்வியில், துரதிஷ்டவசமாக, இந்தியக் கல்வி என்று சொல்லக்கட்டியது ஒன்றுமில்லை. அதில் பெரும்பாலானது மேனுட்டில் இருந்து எடுக்கும் பிச்சைப் பொரு ளாகும். ஆகவே, இந்தியக் கல்வி கிறுவனங்கள், தாங்களே பிச்சைப் பொருளில் பிழைக்கவேண்டி இருப்பதால், பிறரை உப சேரிக்கும் பொறுப்பைத் தங்களிடம் எதிர்பார்க்கக் கூடா தென்ற சமாதானத்தைக் கூறிவிடுகின்றன. அவர்களிடம் ஒன்றும் எதிர் பார்க்கப்படுவதில்லை என்பதும் உண்மை யன்று. மேனுட்டார் அடிக்கடி இந்தியாவின் குரல் எங்கே?' என்று கேட்பதை நானே கேட்டிருக்கிறேன். மேஞடுகளில் தோன்றும் இந்த வின, இந்தியாவிற்கு வந்து, இந்தியாவின் கதவருகில் கின்று உள்ளே கடப்பதைக் கேட்க முயல்கிறது. அந்த வினு, கதவருகில் கின்று காது கொடுத்துக் கேட்கும்பொழுது, உள்ளே மேனுட்டுக் குரலின் எதிரொலியையே கேட்கிறது. அது ஒரு கேலிக்கடத்தா 'கவே இருக்கிறது. மாக்ஸ் முல்லர்” நூல்களைப் புதிதாகப் படித்த நம்மவர்கள் தங்களுடைய பழைய நாகரிகம் பற்றிப் பேசினுலும், மேனுட்டைக் கண்டித்தும் பழித்தும் பேசினுலும், அதைக் கேட்கும் பொழுது ஐரோப்பிய பாண்டு வாத்தியத்தைக் கேட்பது போலவே இருக்கிற தென்பதை நானும் கவனித்துள்ளேன். கீழை நாடுகளின் சார்பாக, இந்தியா ஒரு கல்வி நிறுவனத்தை உண்டாக்கி, உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ளவர்கள் உண்மையை நாடுவதற்காக அதில் வந்து கூடும்படி செய்யும் என நான் எதிர்பார்க்கிறேன். இதனைச் செய்வதற்குரிய வசதியும் ஆதாரமும் நம் நாட்டில் இருக்கின்றன. இங்தியா வரவேற்கும் ஒவ்வொரு நாடும் இந்தியாவை வரவேற்கும். அன்றியும், இந்தி யாவை ஒரு கெளரவமான விருந்தாளியாகவும் போற்றும். ஆளுல் கெளரவம், கெளரவ மின்மை என்ற பிரச்னையே இங்கு எழப் போவதில்லை. மனிதனுடைய ஆன்மாவை வெளிப்படுத்தவேண்டும் என்ற ஒரே கோக்கத்துடன் சத்தி.பத்தை அகத்திலும் கண்டு புறத் திலும் காட்டவேண்டும் என்ற ஒன்றுதான் முக்கியமானதாகும். மனிதனுடைய ஆன்ம வெளிப்பாடு என்ற தத்துவம் கம்முடைய கல்வி மூலமாகப் பிரசாரம் செய்யப்பெற்று, நம்முடைய செயல்கள் மூலம் பயிற்சி பளிக்கப்பெற வேண்டும். அப்பொழுதுதான் 疆 -