பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 & அனைத்துலக மனிதனை நோக்கி என்பதை நாம் மறந்து விடுகிருேம். வண்டிச் சச்கரங்கள் ஒரே நேர் கோட்டில் இருக்க வேண்டும்; அதனுடைய உறுப்புக்கள் ஒழுங்காகப் பூட்டப்பெற்றிருக்க வேண்டும். வெறும் கட்டையில் ரம்பமும், சுத்தியலும் சேர்ந்து வேலே செய்ததால் மட்டும் வன்டி "என்ற பொருள் கிடைத்து விடுவதில்லை. செய்பவனுடைய எண்ணம், சக்தி, முயற்சி ஆகிய யாவும் ஒன்று சேர்ந்தே லண்டி உருவாகியுள்ளது. புறத் தோற்றத்தில் விடுதலே பெற்றுள்ளது. போல் காணப்படுகிற பல நாடுகள் அரசியல் என்ற குதிரை பூட்டி இழுக்கப்பட்டவுடன் அதில் உண்டாகும் இரைச்சல் பக்கத்திலுள்ள வர்களே எல்லாம் உறக்கத்திலிருந்து எழுப்பி விடுவதுடன், அதில் ஏற்படும் ஆட்டம், பயணஞ் செய்பவர் எலும்புக் கணுதோறும் வலியை உண்டாக்கி விடுகிறது. மேலும் இந்த வண்டிகள் வழியில் உடைந்து விடுவதனால், அவற்றை ஒக்கப் பண்ணி மறுபடியும் ஓடுமாறு செய்வது மிகவும் கஷ்டமான காரியமாகிறது. என்ருலும் அவைகளும் ஒருவகையான வண்டிகளே என்பதை நினைவில் இருத்த வேண்டும். கம்முடைய காடு என்று சொல்லப்படும் மரத் துண்டுகளில், ஒருவித சம்பந்தமும் இல்லை என்பதுடன் அவை ஒன்றுக் கொன்று பொருந்தாமலும் உள்ளன. இத்தகைய ஒன்றை, கோபம் அல்லது பேராசை அல்லது மற்றேர் உணர்ச்சியில் பூட்டி ஏகப்பட்ட இரைச்சலுடனும் வருத்தத்துடனும் இழுத்துச் செல் வதையே அரசியல் முன்னேற்றம் என்று கூறுகிருேம். இதனை இயக்கும் சக்தி எவ்வளவு நேரத்திற்கு கிற்கும்? இத்தகைய சக்தர்ப் பத்தில் குதிரையை லாயத்தில் கட்டி விட்டு வண்டியைச் செப்ப னிடும் முயற்சியை மேற்கொள்வது புத்திசாலித்தன மன்ருே? மரணத்தின் வாயிலிருந்து திருமபிய வங்காள இளைஞர்கள்" எழுதும் எழுத்துக்களிலிருந்து அவர்களையும் இத்தகைய எண்ணம் ஆட்டிப் படைக்கிறது என்று தெரிகிறது. எல்லாவற்றையும்விட இன்று நமக்குத் தேவைப்படுவது அக மனிதனே கன்கு வளருமாறு செய்யும் முயத்சியே என்றும் இதன்மூலம் அனவரும் சேர்ந்து செய்யும் முயற்சிக்கு அடிப்படை வேலை நடைபெறும் என்றும் அவர்கள் கூறுகிருர்கள். இதனைப் பெற வேண்டுமானுல் அது புறத்தே இருந்து வரும் ஆனக்குக் குருட்டுத்தனமாக கிய படிவதால் கிடைக்கா தென்றும் கட்டுப்பாட்டுடன் கூடிய ಹTFಿಕT ஆராய்ச்சியால் மட்டும் வருவது என்றும் அறிய வேண்டும். மனத்தில் ஒளி உண்டாக்க முடியாமல், அதைச் செயலற்ற நிலையில் வைத்திருப்பது எதுவும் தடை என்றே கருதப்பெறும்.