பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தியத்தின் அழைப்பு 301 நம்முடைய ஆக்கல் சக்தி மூலம் காட்டை கமதாக்கிக் கொள்ள முனைவது சிறந்த முறையாகும். வெறும் இயந்திரப் பயிற்சியாகாது அது. தேனி ஒரே மாதிரியாகத் தன் கூட்டைக் கட்டுவது போலவும், சிலந்தி ஒரே மாதிரியாக வலை பின்னுவது போலவும் மனிதன் த்ன் முயற்சிகளைச் செய்வதில்லை. அவனுடைய மிகப்பெரிய சக்தி அவனுள்ளேயே அடங்கி இருக்கிறது; கேவலம் குருட்டுப் பழக்கத்துக்கு அடிமை யாகமல் தேவை ஏற்படும்பொழுது அந்தச் சக்தியிலிருந்து வேண்டுமானதைப் பெற்றுக் கொள் வதும் அவன் கையிலேயே உள்ளது. அவனே நோக்கி 'சிக்திக்க வேண்டா; செய்” என்று கூறுவது, இந்த காட்டின் உயிர் நாடியை இதுவரைப் பற்றிக் கொண்டிருந்த பழைய ஏமாற்றத்தை மறுபடியும் நீட்டிப்பதற்கு மேற்கொள்ளும் வழியாகும். நம்மிடம் உள்ள மிகப் பெரிய உரிமையாகிய பகுத்தறிந்து உண்மை கண்டு நாமே முடிவு செய்து கொள்ளும் உரிமையை இப்பொழுது தியாகம் செய்ய முடியாதபடி அவ்வளவு நீண்ட காலம் திருப்தியுடன் இருந்து விட்டோம். இனி இந்த உரிமையை சாஸ்திரீய ஆணகள், பழக்க மாக அனுஷ்டிக்கப்பட்ட வழக்கங்கள் என்ற குருட்டுச் சக்தி களிடம் பலியிட மாட்டோம். கடல் கடந்து செல்ல மாட்டோம்; அவ்வாறு செய்வதை மனு தடுத்துள்ளார். ஒரு முஸ்லீமுடன் உணவு உண்ண மாட்டேன், ஏனெனில் அது விதிக்கப்பட்ட பழக் கத்திற்கு விரோதமானது ' என்று இதுவரைக் கூறி வந்தோம். மற்ருெரு வகையாகக் கூறுமிடத்து, மனத்திற்கு ஒரு சிறிதும் உரிமை தராத பழக்க வழக்கங்களை வரிசையாகக் கடைப்பிடித்து வந்துள்ளோம். எதற்கெடுத்தாலும் தன் வேலைக்காரனையே நம்பி வாழும் எசமானனின் உதவி யற்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம். உண்மையான தலைவன் அல்லது யசமானன் நம் உள்ளேயே இருக்கும் மனிதன்தான் என்பதை மறுபடியும் வலியுறுத்த விரும்பு கிறேன். புறச் சூழ்நிலையுடன் இந்த அக மனிதன் தன்னைப் பிணித்துக் கொளளும் பொழுது எல்லேயற்ற துன்பங்கட்கு ஆளாகிருன். இந்தப் புறச் சூழ்நிலை என்பது ஒர் ஒட்டுண்ணியாய், அடிமைத்தனம் என்ற பட்டறையில் கட்டப்பட்ட ஒரு தானியங்கி இயந்திரமாக உள்ளது. எந்த ஒரு ஜட இயல்பிலிருந்து நம்முடைய அடிமை மனப்பான்மை வளர்ந்ததோ அதனே முறிப்பதற்கு இன்னுங் கொஞ்சம் குருட்டுத்தனமான கீழ்ப்படிதலை மேற்கொள்வதால் எவ்விதப் பயனும் இல்லை. சாவி கொடுத்த இயத்திர பொம்மை காலக் கையை ஆட்டுவது போல நாமும் உடலசைவை மேற் கொள்வதால் பயன் இல்லை.