பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை 19 றையும் உட்ன் சேர்த்துக் கொள்ள விரும்பினர். பழங்கால இந்தி யாவிலும், இடைக்கால இந்தியாவிலும், அரசர்கள், செல்வத் தையும், அதிகாரத்தையும் வழங்கி இருக்கலாம். ஆனல், செல்வத் தால் நிறைந்து, அதிகாரத்தின் எல்லையில் கின்றவர்கள்கட்டத் தாங்கள் வாழும் சமுதாயத்தின் ஒப்புதலைப் பெற்ருல் ஒழியத் திருப்தியடையவில்லை. இதன் பயனுகச் சமுதாய கலப்பணிகள் பலவும், சமுதாயத்தின் தனிப்பட்ட மனிதர்களின் ஊக்கத்தாலும், கொடையாலும், அரசினரின் அதிகாரத்தை எதிர்பார்க்காமலே, செய்யப் பெற்றன. - - ‘. . . . தேசிய வளர்ச்சிப் பணிகள் அனைத்தையும் அரசினரை எதிர் பார்க்காமல், இந்தியர்கள் தாமே செய்துகொள்ள வேண்டும் என்று தாகடர் வற்புறுத்திக் கூறியது, பழைய இந்திய மரபில் காணப்பட்ட சமுதாயப் பொறுப்பை அவர் மிகவும் ஆதரித்தமையால்தான். தனி மனிதனுடைய ஊக்கம் தேவை என்று கூறும் மேனுட்டு நம்பிக்கையுடன் இதுவும் ஒத்துப்போயிற்று. எந்த ஆட்சி, மிகக் குறைந்த அளவில், ஆட்சி செலுத்துகிறதோ அந்த ஆட்சியே சிறந்தது என்ற கொள்கையுடன் அவருடைய கொள்கையும் ஒத்திருந்தது. மேட்ைடில் பரவி இருந்த பரந்துபட்ட மரபு அவரை இவ்விஷயத்தில் ஆட்கொண்டிருக்கலாம். இதனுல்தான் போலும், அவர் சமுதாயத்தின் பெரும் பணிகள் அனைத்தையும் தனிப்பட்ட மனிதர்களும், கூட்டத்தாரும் மனங்கலந்து செய்ய வேண்டுமே தவிர, அரசினர் கட்டுப்பாட்டின் கீழ்ச் செய்யலாகாது என்று கூறினர். * தாகடரின் கருத்துப்படி அரசுக்கும் சமுதாயத்திற்கும் ஒரு வேறுபாடு இருந்தே வருகிறது. அரசு மேற்கொள்ள வேண்டிய பணிகளைக் குறைத்து அவற்றைச் சமுதாயத்திற்கு மாற்றவேண்டும் என்று அவர்.விரும்பினர். வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் ஸ்தல கய ஆட்சி இருக்கவேண்டும் என அவர் வற்புறுத்தினர். சுதங் திரத்துடன் இயங்குவதையே தனி மனிதன் பெரிதும் விரும்புவான். - சமுதாயமும், அதனுடைய நலத்துக்கு அதுவே பொறுப்பாளி யாகும்பொழுதுதான் நன்கு விரிவடைகிறது. எனவே, அதிகாரத் தைப் பரவலாகச் செய்வதற்கே அவர் விரும்பினர். தனி மனி - தனே அல்லது ஒரு குழுவோ சமுதாய வாழ்வின் எந்தப் பகுதியை ஏற்று நடத்த முடியாதோ அந்தப் பகுதியைத்தான் அரசு ஏற்று கடத்த வேண்டும் என்றுங் கூறியுள்ளார். சுருங்கக் கூறுமிடத்து, . அதிகாரம் பரவலாக்கப்பட்டு, L160 உறுப்புக்களும் இயங்கும்