பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 அனைத்துலக மனிதனே நோக்கி முடியாது. திணிக்கப்பட்ட கழுவாய் அல்லது பிராயச்சித்தம் நம் குற்றங்களைப் போக்குவதில்லை. அன்றியும் பகுத்தறிவோடு கட்டிய உறுதியை, ஏதோ சில இலாபங்கள் ஈடு செய்வதுமில்லை. உலகத்தை இன்று அமிழ்த்திக் கொண்டிருக்கிற யந்திர சாத னத்தின் கொடுங்கோன்மையை எதிர்த்து மகாத்மா போர் தொடுத் திருக்கிருர். இங்கே நாம் அனைவரும் அவருடைய கொடியின் கீழே இருக்கிருேம். நம்முட்ைய தேசிய வாழ்வின் ஆணி வேராக அமைக் துள்ள அடிமை மனப்பான்மையை, இந்தப் போராட்டத்தில் கம் துணையாக ஏற்றுக்கொள்ள முடியாது. அதுதான் நம்முடைய உண்மையான எதிரியாகும்; அதனைத் தோற்கடிப்பதன் மூலக்தான் சுயராஜ்யத்தை அகத்தும் புறத்தும் அடையமுடியும். நான் துணிகங்ாக் கொளுத்தச் சித்தமாக இருக்கிறேன் என்ரு லும் குருட்டுத்தனமான ஓர் ஆணைக்குக் கட்டுப்பட்டு அவ்வாறு செய்ய விரும்பவில்லை. அறிஞர்கள் இவ்விஷயம் பற்றித் தங்கள் காலத்தையும் சிங்தனையையும் செலவிட்டு நன்கு ஆராயட்டும். விதேசித் துணியைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பொருளாதாரத் தாங்கலே எந்த வகையான பொருளாதார வழிகளால் சீராக்க முடியும் என்று கூறட்டும். ஒரு வகையான துணியைப் பயன் படுத்தியதால் ஒரு பொருளாதார பிழையைச் செய்துவிட்டதாக வைத்துக் கொள்வோம். தர்க்க முறைப்படி கிரூபித்தால் ஒழிய, துணிகளே எரிப்பதன் மூலம் அந்தப் பிழையை இன்னும் பெரிதாக்க வில்லை என்று எவ்வாறு கூற முடியும் ? அதன் மூலம் இந்தியாவின் குரல் வளையைப் மாஞ்செஸ்டர் பிடித்திருக்கும் பிடியை இன்னும் வலுப்படுத்தவில்லை என்பதை எவ்வாறு நிரூபிக்க முடியும் ? நான் ஒரு கிபுணன் அல்லன் ஆகையால் அந்த முறையில் பேச இயலாது. கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முறையில்தான் நான் இவற்றைக் கேட்கிறேன். நிபுணர்கள் என்ன கூறினுலும் அதை வேத வாக்காக எடுத்துக் கொள்பவன் அல்லன் கான். என்ருலும் வேத நூல் போல அவர்கள் எதனையும் கட்டளை இடுவதில்லை. உன் முடைய அறிவுக்குப்படும் முறையில் கூறி நேரடியான வாதத்திற்கு அழைக்கிருக்கல். மற்ருெரு விஷயத்தையும் கவனிக்க வேண்டிய காலம் வந்துள் ளது இப்பொழுது. அகில உலகத்திலும் ஏற்பட்டுள்ள விழிப்பின் ஒரு பகுதியே இந்தியாவிலும் ஏற்பட்டுள்ளது. உலகப் பெரும் போருடன் ஒரு புதிய யுகத்தின் வாசல் திறக்கப்புெற்றுவிட்டது.