பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.14 அனைத்துலக மனிதனை நோக்கி கலப்பற்ற வஞ்சகம் அல்லது கபடம் என்பது எளிதாகக் கிடைக்கக் கூடியது அன்று என்பதையும், மிக அருகியே காணப்படுவது என்பதையும் என்னுடைய அறுபதாண்டு அனுபவத் தில் கண்டுள்ளேன். முற்றிலும் வஞ்சகமானவனக் காண்பது எளி தன்று. உண்மை என்ன வென்றல் ஒவ்வொரு மனிதனும் இரட்டை இயல்புள்ளவனே யாவான். இரண்டு எதிர்மறையான பண்பாடுகள் ஒன்ருக இருக்க முடியும் என்பதை நம்முடைய தர்க்க மனப்பான்மை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. நன்மையுடன் கலந்து தீமை காணப் படும்பொழுது அந்த நன்மை போலியானது. என்ற முடிவுக்கே விரைந்து விடுகிருேம். சர்வ தேசீய உறவுகளில் இந்த இரட்டைத் தன்மை நன்கு விளங்குகிறது. நம்முடைய பழைய அனுபவங்கள் காரணமாக இத்தகைய நிலையைப் பற்றி ஒருதலைப் பட்சமான முடிவையே கொண்டிருப்போம். எதிர்காலத்துக்குரிய வாக்களிப் பின்படி நோக்கத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாறுதலை மெய்ம்மையான தென்றே ஏற்றுக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தின் தூண்டு தல் மானிட ஒற்றுமையை நோக்கியே செல்கிறதென்பதை இன்றே நாம் அறிய முடிகிறது. சர்வதேச சங்கமும் இந்திய அரசியல் சீர்திருத்தமும்' தோன்றியதே மேனுட்டின் எதிர்காலம் எவ்வாறு , இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் செய்திகளாகும். உண் மையை இச் செய்திகள் முற்றிலும் காட்டவில்லை எனினும் உண்மையைக் காட்ட அவை பெரிதும் முயல்கின்றன என்பதில் ஐயமில்லை. - உலகம் விழிப்படைந்துள்ள இந்த விடியற்கால நேரத்தில், நம் முடைய தேசிய முயற்சிகளில் அனைத் துலக இயல்பு ஒன்றும் இல்லை யானுல், நம்முடைய ஆன்மீக வறுமை பிறர் காணும் கிலேயில் வெளிப்பட்டுவிடும். இவ்வாறு கூறுவதால் கம்முடைய உடனடிக் கடமைகளை ஒதுக்கிவிட வேண்டும் என்று நான் கூறியதாக யாரும் கிளேக்க வேண்டா. விடியற்கால நேரத்தில் பறவை உறங்கி விழித்தவுடன் உணவு தேடுவதிலேயே தன் முழு கவனத்தையும் செலுத்தி விடுவதில்லை. காலே ஒளியின் இன்பத்தில் மூழ்கி அதன் தொல்டையில் இன்ப இசை பிறக்கிறது : ஆகாயத்தின் அழைப்பு அதன் சிறகுத் துடிப்புக்களில் காணப்படுகிறது. அனைத்துலக மானிடம் அதனுடைய அவசர அழைப்பை விடுத்துள்ளது. கம் முடைய மனங்கள் அதே மொழியில் இந்த அழைப்பிற்கு விடை யளிக்கட்டும். முன் பெல்லாம், நம்மை ஆள்பவர்களின் குறைகளே யும், குற்றங்களையும் கண்டு பிடித்து எடுத்துக் கூறுவதில் நாம்