பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 . முன்னுரை அரசியலேயே, ஒவ்வொரு தொகுதியும் மேலும் மேலும் அதிகப்படி ய்ான பங்கெடுத்துக் கொள்ளும் ஓர் அரசியலேயே அவர் கருதினர். பொருளாதார, அரசியல் செயல்களில் தனி மனிதன் சுதக் திரத்தோடு பங்கெடுத்து ஈடுபடுவதே தாகடரின் இலட்சியமாகும். சமுதாயமும் அரசாங்கமும் என்ற கட்டுரை வெளியிடப்படும் முன்னரே, நம்முடைய அரசியல் தளே என்பது கம்முள் இருக்கும் வலிமையற்ற இயல்பைக் காட்டும் வெளிக் குறியாகும் என்று கூறினர். அரசியல் முறையில் ஒரு திட்டம் வகுத்துவிட்டால் மட்டும், இந்தியா விடுதலை பெற்றுவிட முடியாது. ஏனெனில், அது அகத்தே கோயிருக்கையில் புறத்தே தோன்றும் வெளிக் குறிக்கு மருத்துவம் செய்வதாகும் என்றுங் கூறினர். என்று தனி மனிதர். கள் தன்னம்பிக்கையுடன், அறிவை வளர்த்துக் கொண்டு, கல்லொழுக்க நோக்கையும், அழகை அனுபவிக்கும் ஆற்றலையும் பெறுகிருர்களோ அன்றே இந்தியா விடுதலை அடையும். அவர் காலத்தில் இருந்துவந்த அரசியல், உண்மையற்றதாய், வெறும் ஆர வாரமாகவே அமைந்துள்ளது என்றுங் கூறினர். தேச விடுதலைக்கு நடைபெறும் தேசீயப் போராட்டத்தில் பொதுமக்களுடைய ஒத் துழைப்பு இல்லாமல், ஆங்கிலம் அறிந்த ஒரு சிலர் மட்டும் தம்முள் பேசிக் கொள்ளும் கிலேதான் அது. பிற மொழி மூலம் கல்வி கற்பிப்பதால், கல்வியின் கிலே திருப்தியளிக்கவில்லை என்ருல், அதே காரணத்தால், அரசியல் காரியங்களும் திருப்தியளிக்காமல் உள்ளன. மக்கள் புரிந்துகொள்ளும் முறையில் அவர்களே அணு கில்ை அவர்கள் மகிழ்ச்சியோடு ஒத்துழைப்பார்கள் என்றுங் கடறினர். - - தலைமை உரை என்ற கட்டுரை, தாகூர் தலைமையேற்ற ஒரே ஒரு அரசியல் மாகாட்டில் பேசப்பட்டதாகலின் குறிப்பிடத் தக்கதாகும். அரசியல் கடட்டம் ஒன்றில், இந்தியத் தலைவர் ஒருவர், இந்திக்கட்கு இந்தி: மொழியில் பேசிய முதல் கூட்ட மாகும் அது. அந்த உரையில் தாகூர் தம்முடைய அரசியல் திட்டம் என்ன என்பதை விளக்கி, சமுதாய விடுதலைக்கும் பொரு ளாதாரத் தன்னிறைவுக்கும் படுபட வேண்டுமென்பதை விளக் கினர். தனிப்பட்டவர்களைப் பற்றிக் கவலேப்படாமல், பிற நாட்டுச் சமுதாய முறையை ஏற்றுக் கொண்டு, லட்சக்கணக்கான இந்தியர் களை அவமரியாதைப்படுத்தவும், தாழ்மைப்படுத்தவும் தொடங் கியதே இந்தியாவின் தளேயாகும். இந்தியர்கள் தமக்குள் சமத்து வத்தை ஏற்படுத்திக் கொண்டாலொழியப் பிற காட்டினருடன்