பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுயராஜ்யத்திற்கு உழைத்தல் 32.3 கியத்தைப் பழிப்பவராயினும், எவ்வாறு பொருள் தேட வேண்டும் என்று எனக்கு உபதேசஞ் செய்யும் பொழுது இலக்கியத்துடன் எனக்குள்ள தொடர்பை மறந்துவிடக் கூடாது. மாணவர்கள் வாழும் இடங்களில் டிக் கடை வைத்தால் 75 சத வீதம் இலாபம் கிடைக்கும் என்று அவர் கணக்குப் போட்டுக் காட்டலாம். அவ் வாறு நான் டீக் கடை வைத்து மோசமான வறுமையுற்று அழிந்தால், அதனுல், வெற்றிகரமாக டீ வியாபாரம் செய்பவன் அறிவைவிட என்னுடைய அறிவு குறைந்தது என்ற கருத்தில்லை. அதன் எதிராக, என் மனம் வேறு வகையில் ஈடுபட்டுள்ளது என்பதையே அது குறிக்கிறது. ஆகவே, என் கலம் நாடுபவர் நான் துப்பறியும் நவீனங்களோ அன்றிப் பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்கட்குக் குறிப்புரையோ எழுதத் தொடங்க வேண்டும் என்று கூறினல், சூழ்கிலேயின் நெருக் கடி காரணமாக நான் அந்த புத்திமதியைக் கேட்டு அதன்படி நடக்கலாம். அது அதிக ஆபத்தில்லாத வழியாகவும் அமையலாம். அந்த கிலேயில் கூட இலாபம் வருமா என்பது சந்தேகத்துக்குரியது தான். என்ருலும் ஓர் எழுத்தாளன், தன் மனத்தைக் கவிதை யிலிருந்து புதினத்துக்குத் திருப்புவது அவ்வளவு கடினமன்று. ஒரு விவசாயி பல்லாண்டுகளாக உடம்பாலும், மனத்தாலும் பழகியுள்ள பழக்கத்தை ஒரே வினுடியில் ஒதுக்கி விடுவதன் மூலம் அவனைச் செல்வமுடையவளுகவும், மகிழ்ச்சி யுடையவனுகவும் ஆக்கி விடலாம் என முயல்வது கடைபெறக்கூடிய காரியமன்று. நான் முன்னரே குறிப்பிட்டப்படி, மனத்தைப் பயன்படுத்தாதவர்கள் பழக்க வழக்கங்கட்கு அடிமையாகிச் சிறிதளவு மாற்றத்தையும் விரும்பாதவர்களாக ஆகி விடுகின்றனர். ஏதோ ஒரு குறிப்பிட்ட வேலேத் திட்டத்தில் வைத்துள்ள அதிகப் பற்றுக் காரணமாக இந்த மனுே தத்துவ உண்மையை ஒதுக்கி விட்டால் அதன் பயனுக மளுேதத்துவம் கவலேப்படுவ தில்லை. அதற்குப் பதிலாக அர்தத் திட்டங்தான் திண்டா, நேரிடும். மற்றைய விவசாய நாடுகளில் விவசாய முறையைச் சீர்கிருத் துவதற்குரிய முயற்சிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பெற்று வருகின்றன. விஞ்ஞான முறைகளைப் பயன்படுத்தி நம்முடைய காட்டு விளைச்சலப் போல் இரண்டு பங்கு அல்லது நான்கு பங்கு விளையுமாறு செய்கிருச்கள். அறிவுத் துறை எளிமையான தன்று; எனினும் அது ஒன்றுதான் உன்மையான முறை. விவசாயி தன்னுடைய தோழிலில் முழுக் கவனத்தையும் செலுத்தி அதனச்