பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுயராஜ்யத்திற்கு உழைத்தல் 325 சக்தியைத் துண்ட முடியாது. அந்தச் சக்தியே எதிர்ப்பு, தோல்வி என்பவை பற்றிக் கவலைப்படாமல், எவ்வளவு துன்பத்தையும் அவன் சகித்துக் கொள்ளுமாறும், சாவைக்கூட ஏற்றுக் கொள்ளு மாறும் செய்கிறது, - - - தாய் தந்தையர் ப்ேசிக் கொள்ளும் பேச்சில் வடிவம் உள்ள காரணத்தால் அந்த மொழியின் ரூபத்தையே குழந்தை காண முடிகிறது. ஆதலின் அக் குழந்தை மகிழ்ச்சியுடன் மொழியை கற்றுக் கொள்கிறது. அதனை முற்றிலும் விளங்கிக் கொள்ளும் ஆற்றல் இல்லாவிட்டாலும் இந்த ரூபத்தை முழுவதும் காண்பதால், அதனுல் ஈர்க்கப்பெற்றுக் குழந்தை முழு ஆர்வத்துடன் அதனைக் கற்க முற்படுகிறது. மொழியின் இந்த நிறைந்த அழகு இல்லாமல் வெறும் இலக்கணம் மட்டும் இருக்குமேயானுல் தாய் மொழியிடத்து எவ்விதப் பற்றும் இல்லாமற் போவதுடன், அதனைப் பிரம்பின் துணை கொண்டுதான் குழந்தைக்குக் கற்பிக்க முடியும். அதனை கற்பிப் பதற்குரிய காலமும் மிக அதிகமாக நீண்டு விடும். இந்த நாடு முழு மூச்சுடன் சுயராஜ்யத்திற்கு உழைக்க வேண்டு மாயின், இந்த ஒரு காரணத்திற்காகவேனும், சுயராஜ்யத்தின் முழு ரூபத்தையும் நாட்டு மக்களுக்குக் காட்ட வேண்டுமே தவிர அதன் ஒரு சிறு உறுப்பை மட்டும் காட்டுவதிற் பயனில்லை என்று கூறு கிறேன். அந்த ரூபம் அளவால் மிகப் பெரிதாக இருக்கவேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை என்ருலும், உண்மையான தாகவும், முழு வடிவம் பெற்றதாகவும் இருத்தல் வேண்டும். உயிர் உள்ள பொருள்கள் ஒவ்வொன்றும், அதனுடைய வளர்ச்சிப் பரு வத்தின் ஒவ்வொரு நிலையிலும், உயிருள்ள முழுத் தன்மை பெற்றே விளங்குகிறது. குழந்தை பிறக்கும் பொழுது வெறும் கட்டை விர லாகப் பிறந்து, மெள்ள மெள்ளக் கால் வளர்ந்து பதினைந்து அல்லது இருபது ஆண்டுகட்குப் பிறகு முழு வடிவம் பெற்ற மனி தனக ஆவதில்லே. குழந்தையாகப் பிறக்கும் பொழுதே முழு வளர்ச்சி பெற்ற மனிதனுடைய வடிவைக் காண முடிகிறது. அதனுல்தான் குழந்தையைக் காண்பதில் ஒரு மகிழ்ச்சி தோன்றி, அந்த மகிழ்ச்சியின் காரணமாக அதனை வளர்த்துப் பெரிய ஆளாக ஆக்கும் பொறுப்பைப் பெற்ருேர் ஏற்றுக் கொள்கின்றனர். ஓர் உறுப்பை மட்டும் பல நாட்களுக்கு வளர்க்க வேண்டிய பொறுப்பை அவர்கள் மேல் சுமத்தல்ை, அந்த உறுப்பை ஒரு முழு மனிதனுக ஆக்கும் பூொறுப்பு சகிக்க முடியாததாகி விடும்.