பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 அனைத்துலக மனிதனை நோக்கி அதிகப்படியான சக்தி, சண்டையிட்டு வெல்லக் கூடிய தடை களே விரும்புகிறது. அதனுல்தான் இயற்கையின் கொடிய பகுதி பற்றி மேட்ைடு இலக்கியங்கள் அழுத்தம் கொடுத்துப் பேசு கின்றன. அதனை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தால் மேனுட்டார் இயற்கையிடத்துப் பகைமையைத் தேடித் திரிகின்றனர். இந்த உலகம் முழுவதையும் வெற்றி கொண்ட பிறகும் அலக்சாந்தர் பிற உலகங்களை வெற்றி கொள்ள விரும்பிய தும் இதே காரணத்தால்தான். அதிக ஆற்றல் பட்ைத்த இங்த மக்கள், வழியலா வழிமேற் சென்று, பிறர் நடமாடும் பாதையில் தம் சட்டைகளே விரித்துக் கொண்டு அதன் மேல் அவர்கள் கால் வைத்து நடக்கக் கூடாதென வம்பு செய்தனர். தங்களைப் பிறர் ஊறு செய்தவன் முன், வலுவற்ற பிறருக்குத் துன்பஞ் செய்து அதில் இன்பங் கண்டனர். பறக்கத் தெரிந்த பறவைகள் ; கண் கான இடத்தில் வாழும் அச்சமிகுந்த விலங்குகள்...... உயர்ந்த இனத்தாரைக் கூறி அவமானப் படுத்த நான் விரும்பவில்லை. வாழ்வு முன்னேற வேண்டுமானுல் அது தாண்டிச் செல்லக் கட்டிய தடைகளும் வேண்டும். பூமியில் தடைப்படுத்தும் சக்தி இல்லையானல் ஓடை கூட, ஒடிப்பாயும் இயல்பை இழந்து விடும். போரிடும் இயல்பு உயிர்த் தத்துவத்தில் இயல்பாய் அமைந்துள்ளது. இசையைச் செம்மையான முறையில் அனுபவிக்க வேண்டுமாயின் கருவியில் நன்கு சுருதி சேர்க்க வேண்டும். மேடுைகளில் வாழ்வுக் கருவி எதிர்ப்புக்களை எதிர்த்துப் போராடும் முறையில் எல்லாத் தந்திகளிலும் நன்கு சுருதி சேர்க்கப்படுகிறது என்பதறிந்து மகிழ் வோமாக. அண்டத்தின் இருதயத்திலுள்ள ஆக்க சக்தி, தடைகளே முற்றும் நீக்கி விட விரும்பாது. முழுத்தன்மை பற்றிய இலட்சி யத்தை அடைய வேண்டி இருத்தலின் போராடும் உணர்வு பெரி தாகக் கருதப் பெறுகிறது. .. ராபீன்சன் குரூசோ கதையில் இயற்கையோடு ஒன்றுவதால் ஏற்படும் மகிழ்ச்சி வெளிப்பட்டு கிற்கிறது. அங்கே தனித்த மனிதன் தனித்த இயற்கையைச் சந்தித்து, அதனைக் காக்கை பிடித்தும், அதனுடன் ஒத்துழைத்தும், அதன் இரகசியங்க.ே அறி. முயன்றும், அதன் உதவியை நாடத் தன் முழுச் சக்தியையும் பயன்படுத்துகிருன். அந்தக் கதையைப் படிக்கையில், சிக்கன புத்தியுடைய இயற்கை, மூடி வைத்திருக்கின்ற பொருளே அடைய முயன்ற மனிதன், அதில் பெற்ற வெற்றியால் அடைந்த கர்வத்தில் நான் பங்கு கொள்ளவில்லை. அதன் எதிராக, அவனு