பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 முன்னுரை - - r . வணக்கம் செலுத்துவது, மனிதனின் வீழ்ச்சிக்கே அடிகோலி விடும் எனக் கூறிஞர் அவர். இந்திய, மேனுட்டுப் பண்பாடுகளில் மதிப்புடையனவற்றைத் தாகூர் கன்கு அறிந்திருந்தார் எனினும், அவற்றுள் குறுகிய கோக்க முடையவை, எதிர்ச்சக்தியுடையவை ஆகியவற்றைக் கண்டித்தார். திேவை ஏற்பட்ட பொழுதெல்லாம் தம் காட்டவரிடமும், பிற நாட்ட வரிடமும் காணப்பட்ட குறைகளே அஞ்சாமலும், கருணை காட்டா மலும் எடுத்துக் காட்டிஞர். மகாத்மா காந்தியிடம் பெரு மதிப்பும், அன்பும் வைத்திருந்தார். ஆணுல், இவற்றின் காரணமாக, மகாத் மாவின் கருத்துக்களிலும் செய்கையிலும் காணப்பட்ட எதிர்மறைக் கருத்துக்கள் என்று தாம் எண்ணியவற்றைக் கடுமையான முறை யில் எடுத்துக் காட்ட அவர் பின் வாங்கவில்லை. சத்தியத்தின் அழைப்பு என்பதிலும், சுயராஜ்யத்திற்கு உழைத்தல் என்ற கட்டுரையிலும் மகாத்மாவின் கொள்கைகளில் அடிப்படையான சிலவற்றை எதிர்த்துள்ளார். மகாத்மா வகுத்துள்ள திட்டத்தில் ஒரு பகுதி அவரே கூறியுள்ள கொள்கையுடன் முரண்படுகிறது என்பதையும் எடுத்துக் கூறியுள்ளார். - . . . தாகர், அரசியலேத் தொழிலாகக் கொண்டவரல்லர். ஆணுல், இந்திய மக்களின் துன்பத்தைக் கண்டு அதனுல் உந்தப்பட்டுத் தேசியப் போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் அரசியல் சம்பந்தமான செயல்களிலும், பேச்சுக்களிலும் அவர் ஈடுபட்டார். 1905-ம் ஆண்டில் சுதேசி இயக்கத்திற்காக வாதாடும் பேச்சாள ராகவும், அதன் புகழ் பாடும் கவிஞராகவும் அவர் ஆளுர், மறுபடி யும் 1919-ம் ஆண்டில் ஜாலியன்வாலாபாக் கொடுமைகஜனப் பற்றி அவரே முதலில் பேசினர். அரசாங்கத்தின் அரசியல் செய்கைகளை எவ்வளவு காரசாரமாக எதிர்த்தாலும் அதன் காரணமாக பிரிட்டிஷ் மக்களிடத்துள்ள மதிப்பை இழந்து விடவில்லை. இந்திய அரசியல் ப்னிகள், வெளியார் ஆட்சியை குருட்டுத்தனமாக எதிர்க்கும் ஒரு போராட்டமாக இராமல், தேசீயப் புனரமைப்புச் செய்யும் உடன் பாட்டுத் திட்டமாக அமைய வேண்டும் என அங்க் விரும்பிஆர். 1905-ல் சுதேசி இயக்கம் கடைபெற்றபோதும், 1929-ல் சட்ட மறுப்பு இயக்கம் மும்முரமாக நடைபெற்ற போதும், தேசீய அரசியல் செயல்களில் காணப்பட்ட சில நிகழ்ச்சிகள் வெறும் எதிர்மறைச் செயல்களாக இருந்தமைபற்றி அவற்றை வன்மை யாகக கனடிததாா, Yo.