பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞன் நிறுவிய பள்ளி 34、 எங்கள் பிள்ளைகளில் பெரும்பாலோர் பள்ளியில் வந்து சேரும் - பொழுது உடலாலும், மனத்தாலும் வலுவிழந்து சோர்ந்து இருக் தனர். மலேரியா போன்ற உஷ்ணப் பிரதேச நோய்கள் அவர்கள் பரம்பரைச் சொத்தாக இருந்து வந்தன. சகிக்க முடியாத மனக் கோணல் அவர்களிடம் o: டிகொண்டிருந்தது. பிராம்மணன் அகங் கார முடையவனுகவும், பிராம்மணன் அல்லாதவன் வருங்தத் தகுந்த முறையில் தன்னைத் தானே அழித்துக் கொள்பவளுகவும் இருங் தான். பிறர்க்குப் பயன்படும் எந்த நன்மைகளேயும் செய்ய அவர்கள் விரும்பவில்லை; அவ்வாறு செய்வதால் தங்களேத் தவிரப் பிறர் அதல்ை விளையும் பயனை அனுபவிப்பதை அவர்கள் பொறுக்க வில்லை. கூலி ஆள் செய்யவேண்டிய வேலை என்று அவர்கள் கருதும் எந்தப் பணியையாவது செய்யச் சொன்னபொழுது அவர்கள் முணுமுணுக்க ஆரம்பித்தனர். பிறருடைய தர்மத்தில் வாழ்வதில் அவர்கட்கு அவமானம் தோன்றவில்லை. எனினும், தங்களுடைய பணிகளைத் தாங்களே. செய்துகொள்வதில் வெட்க மடைந்தனர். இத்தகைய அற்பத்தனமும் மரத்துப்போன மன கிலேயும் அவர்களிடம் பரம்பரையாக உள்ள குணங்கள் என்று கினைத் திருக்கக்கூடும். ஆணுல், மிகக் குறுகிய காலத்தில் இவை அனைத்தும் மாறிவிட்டன. இந்தப் பிள்ளைகள் கற்றுக்கொண்ட தியாக உணர்ச்சியும், சகோதர ஒற்றுமையும், இன்னும் சிறந்த சூழ்நிலையில் நல்ல சந்தர்ப்பங்களில் வளர்ந்த குழந்தைகளிடங் கூடக் காணமுடியாது. சுறுசுறுப்புடன் கூடிய சுகாதாரமான வாழ்க்கைதான் அவர்களிடம் மறைந்து கின்ற நற்பண்புகள் அனைத்தையும் வெளிக் கொணர்ந்து, அவர்கள் வாழ்வில் மண்டிக் கிடந்த குப்பை கடளங்கள் அனைத்தையும் வெளியேற்றியது. அவர்கள் மேற்கொண்ட அன்ருட அலுவல்களில் புதிய பிரச்னை களும் அவற்றிற்குத் தீர்வு காணவேண்டிய அவசியமும் ஏற். பட்டன. வாழ்க்கையில் நீதிக் கொள்கைகள் கிறைகதிருப்பதை தர்க்க முறையான மெய்ம்மைகள் அவர்கட்கு எடுத்துக் காட்டின. பிற பிள்ள்ேகள் இவற்றை உணரமுடியாததைக்கண்டு அவர்ான் இப்பொழுது வியப்படைகின்றனர். சமையல், நெசவு, தோட்ட வேலே, சூழ்ந்துள்ள இடத்தைத் துப்புரவு செய்தல் ஆகியவற்றுடன், உதவி பெறும் பிள்ளைகட்குக்கட்டத் தெரியாத முறையில், அவர் கட்கு உதவுதல் ஆகியவற்றில் அவர்கள் இன்பங் காண்கிருர்கள். - உதவி பெறுபவர் வெட்கப்படாதிருக்கவே அவர்கட்குத் தெரியாமல்