பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞன் நிறுவிய பள்ளி 345 செயல்களில் கல்வியும் ஒரு பகுதி என அவர்கள் கினைப்பது போலத் தெரிகிறது. பிறவியிலேயே ஏற்பட்ட அறியாமையைப் போக்குவதற்கு மருத்துவ மனையில் செய்யப்படும் வலி மிகுந்த சிகிச்சை யன்று கல்வி என்றும், அது நல்ல உடம்பில் உள்ள " மனத்தின் ஆற்றல் வெளிப்படுத்தும் சக்தி என்றும் அவர்கள் கினேக்கத் தொடங்கிவிட்டார்கள். இந்த முறையில் எங்கள் நிறுவனமாகிய மூலையில் உயிர்த் தத்துவம் மெல்லத் தலைதுாக்கி வருவதைப் பார்க்கும் பேறு எனக்குக் கிடைத்தது. இந்தக் கொடியை, தனிப்பட்ட நீண்ட பெயர் ஒன்றும் சூட்டாமல் அப் படியே வளரவிட வேண்டுமென்பதே என்னுடைய நோக்கமாகும். இது இப்படியே வளரவேண்டும். வேறு பயன் ஒன்றும் இல்லாமல், இயற்கையான மலர்கள், பழங்கள் ஒன்றுங் கொடாமல் கிற்கும் மூங்கிலே, வெறும் தேர்வில் பெறும் வெற்றிகள் என்னும் கொடி பறக்கவிடும் அந்த மூங்கில அப்படியே இந்தக் கொடி மறைக்க வேண்டும் என விரும்புகிறேன். இதனை முடிக்கு முன்னர், எங்கள் கல்வித் திட்டத்தில் மிக முக்கியமான ஒரு பகுதியைப் பற்றிச் சில சொற்கள் கூற வேண்டும். சுற்றுப் புறங்களில் உள்ள காற்று, சூரிய ஒளி ஆகியவற்றி லிருந்து மரம் உணவை உறிஞ்சிக்கொள்வது போலக் குழந்தை களும் தங்கள் அகமனத்தால் சுற்றுச் சூழ்நிலைகளிலிருந்து தேவை யானவற்றை எடுத்துக்கொள்கிருர்கள். அவர்களைப் பொறுத்த மட்டில், விதிகள், வழிகள், முஸ்தீப்புகள், பாடப் புத்தகங்கள், பாடங்கள் ஆகியவற்றைவிடச் சுற்றுச் சூழ்கிலே மிக இன்றியமை யாததாகும். பூமியின் கன பரிமாணம் அதன் மண்ணிலும் தண் ணிரிலும் உள்ளது; ஆனுல் இதனை உருவகமாகச் சொல்லவேண்டு மாயின், சுற்றுச் சூழ்நிலையாலேயே பூமி ஊக்கத்தைப் பெறுகிறது. கிறம், மணம், இசை, இயக்கம் ஆகியவை மூலமாகவே அது வெளிப்படுகிறது. அவனுடைய சமுதாயத்தில் மனிதனும் பண்பாடு என்ற சூழ்நிலையை ஏற்படுத்துகிருன். அவனுடைய தேசியப் பண் . அறியுமாறு ; তরুণ বা ننا أتت ثلاثين سانتاة تنقلت لذت لقب مازنة سFL) لا அன்றியும், அது மரபின் வழிப்பாய்கிற செல்வாக்கையும் அறியு மாறு செய்கிறது. பன்னெடுங் காலமாக வந்துள்ள ஞானத்தின் சாரத்தைத் தன்னேயும் அறியாமல் அவன் உட்கொள்ளுகிருன். உழவர்கள் இயற்கையோடு கூட்டுறவு முறையில் சேர்ந்து வயலே உழ்வு செய்வதுபோல், கல்வியைப் புகட்டாமல், சுரங்கத் தொழி