பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 அனைத்துலக மனிதனை நோக்கி லாளரைப் போன்று நம் கல்வி நிறுவனங்களில் ஏதோ ஒன்றைத் தோண்டி எடுக்கவே பாடுபடுகிருேம். - என்னுடைய பள்ளிக்கூடத்தில் ஒரு சுற்றுச் சூழ்நிலையை ஏற்படுத்தவே பாடுபட்டேன்; அதுவே முக்கியமான வேலையாகும். கல்வி நிறுவனங்களில் மனத்திற்கு சுதந்திரம் தருவதற்காக மகுே சக்திகளை ஊட்டங் தந்து வளர்க்கவேண்டும். கலைக்குச் சொந்த மான இந்த உலகத்திற்குப் பொருத்தமான முறையில் நம் கற்பனையை வளர்க்கவும், மானிட உறவுகட்கு ஏற்ற முறையில் கம் பரிவுகளை வளர்க்கவும் கல்வி நிறுவனங்கள் பாடுபடவேண்டும். பிற நாட்டுப் பூகோளத்தைக் கற்பதைக் காட்டிலும் கடைசியிற் கூறிய பரிவை வளர்ப்பது மிக முக்கியமாகும். பிற மொழி பேசி, பிற மரபுகளுடன் வாழும் மக்களே அறிந்து கொள்ள முடியாமற் செய்யும் நோக்கத்துடன் குழந்தைகள் மனம் இன்று பயிற்சியளிக்கப்பெறுகிறது. இதன் பயனுகப் பிற்காலத்தில் அவர்கள் அறியாமையின் காரணமாக ஒருவரை ஒருவர் துன் புறுத்திக் கொள்கின்றனர். அந்தக் காலத்துக் கேற்ற குருட்டுத் தனத்தால் மிகுதியும் துன்புறுகின்றனர். பிற இனங்களையும், நாகரிகங்களையும் எள்ளி நகையாடும் இந்தத் துர்ப்பழக்கத்தைக் கிறிஸ்துவப் பாதிரிமார்களேகூட வளர்க்கின்றனர். அனைவர்க்கும் சகோரத்துவத்தைப் போதிக்கும் அதே நேரத்தில், தங்கள் கூட்டம் என்ற கர்வத்தால் கட்டுண்டு, பள்ளிக்கட்டப் பாடப் புத்தகங்களின் மூலம்கடிட வளைந்து கொடுக்கக்கூடிய இளம் பிள்ளைகளைக் கெடுக்க முயல்கின்றனர். கம்முடைய பிள்ளைகளே இத்தகைய தீங்குகளிலிருந்து காப்பாற்றவே நான் முயல்கிறேன் ; இந்த இடத் தில் மேனுட்டு நண்பர்களின் பரிவுடைய மனம் செய்யும் உதவி பெருங் தொண்டாகப பயன்படுகிறது. - —1923. குழந்தைகள் கோயிலை விட்டு வெளியே வந்து புழுதியில் விளையாடுகின்றனர் ; ஆண்டவன் குழந்தைகள் ஆடலேக் கண்டு, பூசாரியை மறந்து விடுகிருன். -ரவீந்தரநாந் தாகூர்.