பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை 23 தனி மனிதன் கெளரவ்ம், எல்லாத் தேசங்கட்கும் உரிமையான விடுதலை, சுய ஊக்கம் என்பவற்றில் தாகூர் பெரிதும் நம்பிக்கை கொண்டிருந்தார். கிழக்கும் மேற்கும் என்ற கட்டுரையில் வேற்றுமையில் ஒற்றுமை காணும் கொள்கையை, உலக நாகரிகத் துக்குத் தந்ததே இந்தியாவின் மிகச் சிறந்த கொடை எனத் தாம் நம்புவதாகக் கூறியுள்ளார். கருத்துவேறுபாடுகள் மிகவும் மதிப் புடையவை என்றும் வாழ்வை வளப்படுத்த அவை மிகவும் தேவை என்றுங் கூறினர். இந்திய வாழ்வில் காணப்படும் மொழிகள், சமயங்கள், பண்பாடுகள் ஆகியவற்றின் இடையே வேற்றுமை காணப்படுவதே ஒரு தெய்வீகக் கருத்தால்தான் என்றும் அவர் கம்பினர். வேற்றுமையில் ஒற்றுமை காண்கின்ற ஒற்றுமையே, இந்தியாவில் பண்டும் இன்றும் காணப்பட்ட, காணப்பட வேண்டிய இந்திய ஒற்றுமையாகும். இதில் ஒவ்வொரு மொழியும், ஒவ்வொரு சமயமும், ஒவ்வொரு பண்பாடும் தத்தமக்குரிய இடத்தைப் பெற வேண்டும். நவீன உலகில் இடம் பெற்றுள்ள பல்வேறு தேசங்களி டையே இந்த ஒற்றுமை எவ்வளவு தேவை என்பதை நாம் எளிதிற் காண முடியும். . . - - நவீன இந்தியாவின் அரசியல் விழிப்புணர்ச்சியில் தாகடரின் இலட்சியங்கள் எவ்வளவு தூரம் தாக்கியுள்ளன என்பதைப் பல வழிகளில் அறியலாம். உள் துறையில் இந்தியா ତଓ கடட்டமைப்பு நாடாக இருக்க முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு உறுப்பும் முழுச் சுய உரிமையுடன், கட்டமைப்பின் உறுப்பாகவும் அமைந்துள்ளது. இந்தியப் பிரஜைகளிடையே, சாதி, சமய, இன, மொழி, பால் வேறுபாடு எதுவும் இல்லாமல் அவர்கள் அனைவரும் சமமாகக் கருதப் படவேண்டும் என்பதை அவர்தாம் முதலில் கூறினர் என்று கூற முடியாவிட்டாலும், இதனை விடாமல் அழுத்திக் கடறியவர்களுள் அவரும் ஒருவர் என்பதை மறுக்க முடியாது. வெளித் துறையில், பல்வேறு இனத்தாரிடையே ஒவ்வொருவருடைய வேறுபட்ட அரசியல் நம்பிக்கைகளுக்கும் மரியாதை காட்ட வேண்டும் என்று கினைப்பதும், இவற்றை அமுக்குவதன் மூலம் ஒற்றுமையைக் கான முற்படாமல், அவற்றிற்கும் இந்த ஆட்சி முறையில் இடம் உண்டு என்று கினப்பதும் அவர் போதித்த தத்துவத்தின் உடனடிப்ான பயன்களாகும். ஒரு நாட்டிலுள்ள தனிப்பட்ட கூட்டத்தின், அல் லது நபரின் ஆளுமையை அமுக்கிவிட முயற்சி நடைபெற்ருல், நாடு முழுவதும் துன்பமடையும் எனக் கூறினர். அதேபோல எந்த ஓர் இனமாவது, நாடாவது சுதந்திரமாக முழு வளர்ச்சியடையவெரட்