பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 அனைத்துலக மனிதனை நோக்கி வயிறும், யானே முகமுமுடைய கணேசனே இருக்கிருன். இதன் எதிராக, நகரம் முன்னணியில் இருக்கும் இடத்தில் தனி மனிதனே அதிகச் செல்வாக்குடையவனகிவிடுதலின், சமுதாயம் ஒதுக்கப்படு கிறது. அங்கு நாகரிகம் தன் சொந்த நெருப்பிலேயே எரிகிறது. எவ்வளவுக் கெவ்வளவு அது சுடர் விட்டு எரிகிறதோ அவ்வளவுக் கவ்வளவு அதன் எரிபொருள் கரிய நிறமாக இருக்கும்; இறுதியில் அது எரிந்து சாம்பலாக ஆகி விடுகிறது. இதே முறையில் பல்வேறு நாகரிகங்கள் தம்மைத் தாமே எரித்துக் கொண்டுள்ளன. நவீன ஐரோப்பாவும் இவ்வாறு தன்னைத் தானே எரித்துக் கொள்ளும் வகையைச் சேர்ந்ததா, இல்லையா என்பதை அதற்குள் கூற முடியாது. . - - நகரத்தில்தான் சுறு சுறுப்பு மிகுந்துள்ளது. பல்வேறு மையங் களில் நம் உடம்பின் ஆதார சக்திகள் ஒன்று சேர்க்கப்படுகின்றன. கீழ்கில விலங்கு வாழ்வில் இந்த மையங்கள் கன்கு நிறுவப்பட வில்லை. கூர்தல் அறத்தின்படி மூளை, நுரை ஈரல், இருதயம், வயிறு ஆகியவை தம் தொழிலில் வளர்ச்சி யடைகின்றன. இவற்றை நகரங்களோடு ஒப்பிடலாம். - இராஜ்ய பரிபாலனத்தின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நகரங்கள் தயார் செய்யப்படுகின்றன. அக் காலத்தில் இத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் யந்திரங்கள் ஓரளவே பயன் பட்டன. ஆக்க முயற்சியில் ஏற்படும் மகிழ்ச்சிக்காகவே பொருள் களே உற்பத்தி செய்தார்கள். கிடைக்கும் பயனைப் பற்றிய பசியினுல் . அன்று பொருள்கள் தயாரிக்கப்பெறவில்லை. நவீன யுகத்தில் உள்ள யந்திரங்கள், வேலை செய்யும் திறமையைப் பெருக்கியதோ டல்லாமல், இலாபப் பசியையும், கொள்ளே இலாபம் கிடைக்கும் வழியையும் உண்டாக்குகின்றன. இதன் பயணுகத்தான் தனி மனிதன் அக்கறைக்கும் சமுதாயத்தின் அக்கறைக்கும் வேற்றுமை ஏற்பட்டு இறுதியில் போராட்டமாக முடி கிறது. கிராமத்திற்கும் நகரத்திற்கும் உள்ள தொடர்பைப் - - y - بچ ہ-سمِ பேராசை துண்டித்து விடுகிறது. நகரம் கிராமத்தின் வடிகாலாக ஆகிவிடுகிறது; ஏனென்ருல் கிராமத்திற்குத் தரவேண்டியதை நகரம் தருவதில்லை. நகரத்தின் செயற்கை விளக்குகள் மிகப் பிர காசமாக எரிகின்றன. இந்த விளக்குகள் சூரியன், சந்திரன், விண் மீன்கள் ஆகியவற்றேடு எவ்விதத் தொடர்புங் கொள்ளவில்லை ; ஆனல் எளிய கிராம விளக்குகள் அவிந்துவிட்டன. 'சமுதாயத்தின் அமைதியான ஒதுக்கிடத்திலிருந்த மனிதர்களை, ஆலேகளின் சங்