பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 அனைத்துலக மனிதனை நோக்கி கிராமங்கள் பெண்களைப் போன்றவை. இனத்தாரின் தொட் டில் அவர்கள் கையில்தான் இருக்கிறது. நகரங்களைக் காட்டிலும் கிராமங்களே இயற்கையின் அருகாமையில் உள்ளன : அதல்ை வாழ்வு ஊற்றுடன் அதிகத் தொடர்பு கொண்டுள்ளன. இயல் பாகப் புண்ணை ஆற்றும் சக்தி கிராமங்களில் உண்டு. மக்களுக்கு அடிப்படைத் தேவைகளான உணவு, இன்பம், ஆகியவற்றுடன், வாழ்வின் சாதாரண கீதத்தையும், கிராமங்கள் தாமே ஏற்படுத்திக் கொண்டு, மகிழ்ச்சியடையும் அழகிய சடங்குகள் ஆகியவற்றையும் பெண்கள் தருவதுபோல, கிராமங்கள் தரவேண்டியது &#51–65) is) யாகும். ஆனல் ஓயாத உழைப்பாலும், கிராமங்களினுடைய பயனப் பிறர் அளவு மீறிக் கொள்ளையடிப்பதாலும், அவை சுரத் தின்றி ஆக்க வேலையில் ஈடுபடாமல் கின்று விடுகின்றன. பல் லாண்டுகளாக இருந்த வீட்டரசி கிலேயிலிருந்து, வீட்டு வேலைக்காரி என்ற இடத்திற்குக் கிராமங்கள் இறங்கி விட்டன. நகரம், தனக்கேயுரிய அகங்காரத்தாலும், கர்வத்தாலும், வாழ்வின் ஆதாரங்களாகிய சுகாதாரம், இன்பம் ஆகிய இரண்டிற்கும் தன்னல் ஏற்படும் துன்பம்பற்றி ஒன்றுமே அறியாமல் இருந்து விடுகிறது. - மேக தூதம் என்ற சம்ஸ்கிருதக் கவிதையைப் படிக்கை யில் கற்பனை மூலம் மேகமாகிய துாதன் செல்லும் பழைய உலக ஊர்கள் தோறும் நாமும் செல்கிருேம். அந்தப் பெயர்களே அழகாக உள்ளன. இந்த நகரங்கள், வேறு எல்லாவற்றையும் விட, அன்றைய மனிதனுடைய அன்பு, கம்பிக்கை என்ற இரண் டையும் காட்டி கின்றதை நாம் உணர்கிருேம். இந்த நகரங்கள் அவன் ஆன்மாவில் உறைந்த பல அழகுகளே, அவற்றின் வீடுகளிலும், கோயில்களிலும் அன்ருடம் மகளிர் செய்த அலங் காரங்களிலும் கொண்டிருந்தன. அன்றியும் அவர்களுடைய கடைவீதிகளில் நடைபெற்ற பண்டமாற்றலிற்கடிட இந்த அழகு உறைக்தது. அவர்கள் வாழ்ந்த காலத்தில் டில்லியும், ஆக்ராவும் எவ்வாறு இருந்திருக்கும் என நாம் கற்பனை செய்து பார்க்கலாம். ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் ஆக்க சக்தியையும், மானிட இயல்பையும் அவை காட்டி கின்றன. அவற்றின் அழிவிற்கட்ட இந்த நகரங்கள் மனிதனின் பெருமையைத் தம்மிடம் நிலைக்க வைத்துள்ளன. ஆணுல் நவீன நகரங்கள் சந்தர்ப்பங்களைத் தருகின்றனவே தவிர இலட்சியங்களைத் தரவில்லை. - -