பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை 25。 சமீப காலத்தில், பிற நாட்டு மக்களுடன் தொடர்பு கொள்ளும் ஒரே நோக்கத்துடன், கல்வி, பொருளாதாரம், அரசியல், சமயம், ஆகிய எந்த இலக்கும் இல்லாமல் தாகர் வெளிநாடு சென்று வந்தார். அவருடைய பண்பாட்டுப் பயணம் மேலே காடுகளோடு கின்று விடவில்லே. கல்லெண்ணத் தூதுவராகச் சீன, ஜப்பான், இலங்கை, மலேயா, இந்தோனீஷ்யா, பாமா, தாய்லாந்து, இந்தோ-சீன. ஈரான், ஆப்கானிஸ்தானம் ஆகியவற்றுடன் தென் வட அமெரிக்காக்களுக்கும் சென்று வந்தார். இந்த வகையில் இந்திய மக்களின் அறிவு வளர்ச்சிக்கும் உணர்ச்சி ஒட்டலுக்கும் பாடுபட்டார். ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளாக மேனுட்டார் மூலமும், சிறப்பாகப் பிரிட்டிஷார் மூலமுமே இந்தியர்கள் உலகைக் கண்டு வந்தனர். இதனே ஈடு செய்யும் முறையில் நம் காட்டின் மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்கு ஆகிய பிராந்தியங்களில் உள்ள அண்டை நாட்டார்களுடைய கொடை எவ்வளவு என்பதைத் தாகடர் அறிவித்தார். 3 சமீபகால வரலாறு தாகடரின் நம்பிக்கைக்கு உரமூட்டுவதாக அமைந்துள்ளது. விஞ்ஞானமும் தொழில் நுட்பமும், மாறுபட்ட பொருளாதார, அரசியல் முறைகளே கெருங்குமாறு செய்துள்ளன. முன்னர்ப் பூகோள ரீதியில் பிரிக்கப்பட்டிருந்த மாறுபட்ட சமய, இலட்சியக் கூட்டங்கள் இன்று நெருங்கி வாழ்கின்றன. உலகம் எரிந்து போகாமல் இருக்க வேண்டுமாயின் ஒன்றை யொன்று சகித்துக் கொண்டு வாழப் பழகிக்கொள்ள வேண்டும். இந்த வேற்றுமைகளை வளர அனுமதித்தால், அதன் பயன் அனைவருக்கும் தீமையாய் முடியும். வேறுபாடுகளை அமிழ்த்திவிடக் கடடாதென்றும் பெரிய பூர்ணத்துவத்தில் அவற்றிற்குரிய இடம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் தாகூர் போதித்தார். பல்வேறுபட்ட தேசங் களும், இலட்சியங்களும் ஒத்துழைக்க வேண்டுமே தவிரப் போட்டி இடக் கட்டாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ஏனென்ருல், அவர் கருத்துப்படி ஒருவரை ஒருவர் எதிர்பார்த்து கிற்கும் தன்மைகான் நவீன காலப் பிரச்னையைத் தீர்க்குமே தவிர வெறும் சுதந்திரம் அதன்த் தீர்க்க முடியாது. v தாகூரினுடைய, கல்வி, சமுதாய, பொருளாதார, அரசியல் கம்பிக்கைகள் அனைத்தும் அவருடைய ஆழ்ந்த சமய உணர்ச்சி யின் நிறத்தில் தோய்ந்து நிற்கும். அவருடைய தந்தையார் உப . - 教