பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகரமும் கிராமமும் 371 கிறதென்பதை காம் காண வேண்டும். ஸ்வதேசி சமாஜை (சமுதாயம் அரசாங்கமும்) கான் எழுதிக் கொண்டிருக்கும் பொழுது இதே கருத்து எனக்கு உதயமாயிற்று. நான் அப்பொழுது என்ன சொல்ல கினைத்தேனென்ருல், நாடு முழுவதையும் பற்றி காம் சிந்திக்க வேண்டிய்தில்லை என்பதுதான். ஒன்று அல்லது இரண்டு கிராமங்களில் நம் பணியைத் தொடங்கலாம். உதவி இன்மை, அறியாமை என்ற விலங்குகளிலிருந்து ஒரு கிராமத்தை விடுதலை செய்தாலுங்கூட இந்தியா முழுவதற்கும் ஓர் இலட்சியத்தை உண்டாக்கக் கூடும். இந்த எண்ணங்தான் எனக்கு அப்பொழுது உதயமாகி இன்னும் இருந்து கொண்டு வருகிறது. சில கிராமங் களேயாவது இந்த முறையில் புனரமைப்புச் செய்து விட்டால், அவையே என்னுடைய இந்தியா என்று நான் சொல்லத் தயார். உண்மையான இந்தியாவைக் கண்டு பிடிப்பதற்கும் அதுவே வழி யாகும. —1928.