பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூட்டுறவு ვ73 கருதப்பெறுவான். தனித்து நிற்கும் மனிதன் துண்டிக்கப்பட்ட - ஜன்ம மாவான். குழந்தை தனித்து இருக்க நேரும்பொழுதுதான் பிசாசைக் கண்டு அஞ்சுகிறது. ஒற்றையான மனிதன் தன் வன்மைக் குறைவைக் கண்டு அஞ்சுவதாகும் இது. பிசாசைக் கண்டு அஞ்சும் இந்த அச்சத்தின் நகல்களே நம்முடைய மற்றைய அச்சங்கள். வறுமைபற்றிய அச்சம் இருக்கிறது. நாம் ஒரு குழுவாக ஒன்று கூடி எதிர்த்தால் இதனைப் போக்கிவிட முடியும். பலரும் ஒன்ருகக் கூடினமையால்தான் வாழ்வில் சிறப்புடைய அனைத்தை யும் மனிதன் சாதிக்க முடிந்தது. சிறப்புடையவை என்பவை அறிவு, நம்பிக்கை, சக்தி, செல்வம் ஆகியவைகளாம். மணற் பாங்கான பூமி ஒட்டுதல் இல்லாமையில்ை ஒன்றையும் விளைய விடுவதில்லை. சத்துப்பொருள் அந்த மணலில் தங்க முடியாமல் இடை வெளிகள் மூலம் ஓடிவிடுகிறது. இந்தச் சந்துக்களே அடைக்கக் கூடிய மட்கிய தழை, களிமண் போன்றவற்றை அதில் கலப்பதால், அந்த இடைவெளிகளே அடைத்துவிட முடியும். மனிதர்களைப் பொறுத்தமட்டிலுங்கட்ட இதுவே உண்மை. அவர்களின் இடையே இடைவெளிகள் பெரிதாக இருக்கின்றவரை அவர்களுடைய ஆற்றல் பயன்படுவதில்லை. மனிதன் மற்ற மனிதர்களுடன் சேரும்பொழுதுதான் தன்னைத் தானே காண முடிகிறது என்று கடறுகையில் ஓர் அடிப்படையை நாம் ஆராயவேண்டும். மனிதன் பேசமுடியும்; அவனுக்கென்று ஒரு மொழி இருக்கிறது. விலங்குகட்கு மொழி இல்லை. தனக்குள் ளேயே தான் அழுந்திக் கிடக்கின்ற ஒரு மனம், ஒற்றுமைப்படுத்தும் இயல்புடைய மொழி காரணமாகப் பிறருடன் சேர முடிகிறது. பேச்சின் மூலமாகத்தான் என்னுடைய மனம், பிற மனங்களில் சென்று தாக்க முடிகிறது. அதன் பயணுக அந்த மனங்களே யான் பகிர்ந்துகொள்ள முடிகிறது. அகத்தில் ஏற்படும் வறுமையைப் போக்கி வளர்ச்சியைச் செய்வது இந்தப் பேச்சு ஒற்றுமைதான். மனித குலம் மொழியை எழுத்து மூலம் வடித்துக்கொண்டு அதை கிலேநிறுத்தியவுடன் மனங்களுக்குள் ஏற்பட்ட தொடர்பு விரிவடைய லாயிற்று. வாய்மொழிகள் மிக நீண்டதுாரம் செல்ல முடிவதில்லை. அவை காளாவட்டத்தில் அழிவுற்றதுடன், வாய்க்கு வாய் மாறும்பொழுது அவற்றின் பழைய நிலையை இழக்கின்றன. ஆளுல் வரி வடிவில் எழுதப்பெற்ற எழுத்து, கடலேயும் மலையையுங் கடந்து கென்ருலும் இயல்பு மாறுவதில்லை. இந்த முறையில்