பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 அனைத்துலக மனிதனே நோக்கி பற்றிப் பிரசங்கம் செய்வதில் பயனில்லை; நடைமுறை மூலம் சரியான விடைகளைக் காண முயலவேண்டும். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இத் திசையில் வேகமாக முன்னேறுகின்றனர். அவர்கள் யந்திரங்களின் உதவியினலேயே உழவு, அறுவடை, கட்டுக் கட்டல், தானியத்தைக் களஞ்சியத்தில் இடல் ஆகியவற் ற்ைச் செய்கின்றனர். நம்முடைய நாட்டிலும் இம் முறையை மேற் கொண்டால் பல நன்மைகள் கிடைக்கும். விவசாயம் தொடங்கு முன்பு மழையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்க் வேண்டி யுள்ளது. ஓர் உழவு மழை பெய்தவுடன் ஒரு சிறு துண்டு கிலத்தை மேலாகச் சுறண்டத்தான் முடிகிறது. சில வாரங்கட்கு மழை இல்லை யென்ருல் தானியம் தெளிப்பதையே தள்ளிப்போட வேண்டி இருக்கிறது. அதன் பயனுகக் கதிர் முற்றி வருங் காலத்தில் பருவக் காற்ருல் ஏற்படும் மழையில் பயிர்கள் மூழ்கிவிடு கின்றன. அறுவடையிற்க.டத் தொல்லே ஏற்படுகிறது. அதிகப் படியான உழைப்பாளிகளைக் கிராமத்திற்குள்ளேயே பெறுவது கடினமாகலின், கிராமத்திற்கு வெளியே இருந்து கடலியாட்க%ளப் பிடிக்கவேண்டி இருக்கிறது. அறுத்த கதிர்கள் வயலில் கிடக்கும் போது அதிக மழை பெய்தால் பெரு நஷ்டம் ஏற்படுகிறது. யந்திரக் கலப்பையும், அறுவடை செய்யும் யந்திரமும் இருந்தால் சிறிய பருவ மாறுதல்களைக்கூட நன்கு பயன்படுத்திக்கொள்ள லாம். உரிய காலத்தில் பயிரிடவும், முற்றிய கதிர்களைச் சேகரிக் கவும் முடியும். இந்த யந்திரங்களைப் பெரிய பரப்புடைய வயல்களில்தான் பயன்படுத்த முடியுமென்பதும், பெரிய அளவில் இதற்கு முதல் தேவைப்படும் என்பதும் உண்மைதான். நம்முடைய குடியானவர் களின் சக்திக்கு மேற்பட்டது. இது என்று கூறிவிட்டு வாளா இருந்து விட்டால் அழிவை வரவேற்பதைத் தவிர வேறு வழி யில்லே. யந்திர வசதிகள் பெருகிக் கொண்டிருக்கின்ற இந்தக் காலத்தில் கல்முடைய குடியானiர்களும், தொழிலாளர்களும், இந்த யந்திரங் களே வரவேற்க வேண்டும் , இன்றேல் கொஞ்சங் கொஞ்சமாகப் பின்னேறிச் சென்று படுகுழியில் விழ நேரிடும். கம்பிக்கையை இழந்தவன் அழிய வேண்டியதுதான். பிச்சை தருவதாலோ அன்றி வேறு உதவிகள் செய்வதாலோ அவனே யாரும் காப்பாற்றிவிட முடியாது. தனிமனிதன் செய்ய முடியாததை ஐம்பது மனிதர்கள் ஒன்று கூடினுல் செய்துவிட முடியும் என்பதை அவன் உணருமாறு செய்ய வேண்டும். இதுவரையில் தனித்