பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூட்டுறவு ვ7 7 தனியே உழவு செய்து வந்த ஐம்பது குடியானவர்களும் தங்களு டைய கிலம், உழைப்பு, களஞ்சியம் ஆகியவற்றை ஒன்று சேர்த் தால் மிகப் பெரிய நடைமுறை முதலைச் சேர்த்துவிட முடியும். அப் பொழுது யந்திரங்களைச் சேகரிப்பது முடியாமற் போகாது. தினம் ஒரு சேர்’ மட்டும் அதிகப்படியான பாலை உற்பத்தி செய்யக்ககூடிய குடியானவன் தகுந்த முறையில் வாணிபம் செய்ய முடியாது. ஆல்ை நூறு மனிதர்கள் தங்களுடைய பாலே எல்லாம் ஒன்ருகச் சேகரித்திால் ஒரு வெண்ணெய் எடுக்கும் யந்திரத்தை விலக்கு வாங்கி கெய் தயாரித்து வியாபாரம் செய்ய முடியும். ஐரோப்பா வில் இதுவே சகஜமாக கடைபெற்று வருகிறது. டென்மார்க் போன்ற சிறு நாடுகளில் வாழும் மக்கள் ஒன்ருகச் சேர்ந்து வெண்ணெய், பாலடைக் கட்டி ஆகியவற்றை ஒன்ருகச் சேர்த்து வாணிகம் செய்து வறுமை என்பதையே அவர்கள் வாழ்விலிருந்து ஒட்டி விட்டனர். மேலும் வாணிகத்தால் ஏற்பட்ட தொடர்பால் இந்தக் குடியானவர்களும், பால்காரர்களும், உலக மக்களுடன் கெருங்கிய தொடர்பு கொண்டு பிறரைப் புரிந்து கொள்ளல், பிற நாட்டாரை அறிதல் ஆகியவற்றையும் கற்றுள்ளனர். - ஒரு சம்பாதனையைச் செய்வதற்கு, பலர் ஒன்று கூடும் இந்தப் பழக்கத்தை, ஐரோப்பாவில் கூட்டுறவு முறை என்று கூறுவார்கள். கம்முடைய காட்டில் பன்னெடுங் காலமாக இருந்து வரும் வறுமை யையும், தேக்கத்தையும் விடுவிக்க வேண்டுமானுல் இந்த முறை யால்தான் முடியும். .. கற்றறிந்தவர்கள் நாட்டிற்கு உழைக்க விரும்புகின்றனர். நோயாளிகட்கு உதவுதல், பசித்தவர்க்கு உணவு கொடுத்தல், ஏழை கட்குப் பிச்சை போடுதல் ஆகியவை அவற்றுள் சில வழிகளாம். கிராமம் முழுவதும் நெருப்பு பற்றி எரியும்பொழுது அதை அணைக்க விரும்பி, அதற்காக அதன் மேல் ஊதுவது போலாகும் இது. புறத்தே கர்னப்படும் குறிகட்கு மருத்துவம் செய்வதன்மூலம், கம் நோய்களைக் குணப்படுத்தி விட முடியாது. நோய்க்குரிய காரணங் களே ஆராய்ந்து நீக்க வேண்டும். முதலாவது, மக்கள், மாகாண வெறி பிடித்து அலேயக்கூடாது ; அவர்கள் உலக சமுதாயத்தின் உறுப்பினர்கள் என்பதை உணரவேண்டும். இரண்டாவதாக, பொருளாதாரத் துறையில் அவர்களுடைய உழைப்புகள், பிற இடங்களில் உள்ள மக்களின் உழைப்புடன் ஒருமைப்படுத்தப்பட வேண்டும். மற்ருெரு வகையாகக் கறிஞல் நீண்டு உயர்ந்த் மரங் அளப் போல, வேர் ஓடிச் செல்வதற்கு அகன்ற பூமியும் கிளைகள்