பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 முன்னுரை கிஷதங்கள், சூபி ஞானிகளின் மொழிகள் ஆகிய இரண்டிலும் தோய்ந்தவர். அவரிடமிருந்து வாழ்வின் ஒற்றுமை பற்றித் தாகடர் கற்றுக் கொண்டார். தம்முடைய இளம் பிராயத்திலேயே ஒருநாள் திடீரென்று இயற்கை, மனிதன் ஆகிய இருவரிடையேயும் ஓர் உறவு இருப்பதை எவ்வாறு அனுபவ பூர்வமாக அறிந்தார் என்பதை அவரே எழுதியுள்ளார். இதன் பயனுக, மிகச் சிறந்த இசைப்பாடல் ஒன்று நமக்குக் கிடைத்தது. அவரைப் பொறுத்தமட்டில், அவருடைய வாழ்வுக்கு வழி காட்டும் கொள்கை ஒன்றும் கிடைத்தது. மெய்ப்பொருளின் தரிசனத்தைப் பெற்ற தாகடர், சத்தியம், அழகு, நன்மை என்ற மூன்றுமே மதிப்புடையவை எனக் கண்டார். உலகிலுள்ள எல்லாவற்றின் அடியிலும் மறைந்து கிற்கும் ஒற்றுமை பற்றி அவர் அறிந்ததன் பயனுக, இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையே உள்ள ஒன்றல் தன்மையை வலியுறுத்தும் அவருடைய கல்வித் திட்டம் கிடைத்தது. எல்லாத் தனி மனிதர்களும் இறுதியில் முழு முதற் பொருளில் ஒன்ருகிருர்கள் என்ற உண்மையை அவர் அறிந்ததிலிருந்து, பொருளாதாரத்திலும், அரசியலிலும், தனி நபர் பற்றி அவர் கொண்ட கவலை உதித்தது. பல்வேறு வகைப்பட்ட மனிதர்களும் அரசியல் துறையில் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் வற்புறுத்தியது, பல்வேறு கருத்துக்களுக்கும் அவர் மதிப்புக் கொடுக்கும் இயல்பிலிருந்தும், எல்லா மக்களும் கடவுளின் பிள்ளை கள் என்று நினத்ததிலிருந்தும் கிடைத்தது. சிறு குழுவினரின் தேவைகட்கு நாம் அதிகம் மதிப்புக் கொடுப்பதால்தான் வெறுப்பும், போராட்டமும் தோன்றுகின்றன என அவர் நம்பினர். அனைத்துலக ஒற்றுமை நம்முடைய அக மனத்தில் படும்பொழுதுதான் இந்தச் சிறு கட்சி உரிமைகள் தத்தமக்குரிய இடத்தைப் பெறும் என்று அடுத்து என்ன ?’ என்ற கட்டுரையில் கூறியுள்ளார். அனைத் துயிர்களிடத்தும் அன்பையும் ஒற்றுமையையும் போதிக்கின்ற - காரணத்தால் சமய உணர்வே வாழ்க்கையின் சிறந்த பயன் என்றும் அவர் நம்பினர். வாழ்க்கையின் ஒருமைப்பாட்டை ஆழ்ந்து அறிந்திருந்தமை யின், சமயம் என்பது பரந்த நோக்கமுடையதே தவிரக் குறுகிய நோக்கமுடையது அன்று என்பதே தாகூரின் கருத்தாக இருந்தது. வாழ்வை, எவ்வித மனத்தாங்கலுமின்றி, முழுவதாக ஏற்றுக் கொண்டார் அவர். மனித இயல்பின் எந்தப் பகுதியையும் ஒதுக்கி விட விரும்பவில்லை. துறவு கிலேயைத் தாம் விரும்பவில்லை என்று