பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 அனைத்துலக மனிதனை நோக்கி கேட்டையும் கொண்டு வருகிறது; ஏனெனில் இந்த நாகரிகத்தின் முற்போக்குக்கு வறுமை ஒரு தடையாகவே இருக்கிறது. இன்றைய நிலையில் பணமே எல்லாச் சக்திகட்கும் மூல காரணமாகக் கருதப்பெற்று, அதற்கே அதிக மதிப்பு வழங்கப்படு கிறது. அரசியல் கொள்கைகட ராஜ்யத்தை விஸ்தரிக்கும் முறை யில் அமைய வில்லை. வாணிகத்தையும் வியாபாரத்தையும் பெருக்கு வதையே பெரிதும் விரும்புகின்றனர். மேலும் செல்வத்தைப் பெருக் கும் வழியாகவே இது கருதப்படுகிறது. நாகரிகம், இவ்வாறு பல உறுப்புக் கொண்டதாக வளர்ச்சி அடையாத காலத்தில் அறிஞன், முனிவன், வீரன், உபகாரி என்ற இவர்களேயே பணக்காரர்களைவிட அதிகமாகப் போற்றினர். அவர்கட்குக் காட்டப்பெற்ற மரியாதை மனித சமுதாயத்திற்கே காட்டப்பெற்றதாகும். பண வேட்டை மட்டும் ஆடுபவனே மக்கள் மதிக்கவில்லை. இன்றுள்ள அனைத்தும் செல்வத்தில் வாழும் ஒட்டுண்ணிகள் நாகரிகம். பணம் சம்பா திப்பது மட்டுமல்லாமல், பணத்தை வணங்குவதும் முக்கியமாகி விட்டது. இந்தப் பொய்த் தெய்வம் மனிதனிடம் காணப்படும் நன்மைகளை அழித்து விடுகிறது. வேறு எக்காலத்திலும் மனிதன் இந்த அளவு தனக்குத் தானே பகையாக இருக்கவில்லை. இந்த பணப் பசியைப்போல் வேறு எதுவும் இவ்வளவு கொடுமை உடைய தாகவும், சம நோக்கு அற்றதாகவும் இருக்கவில்லை. இந்த அகோர மான யானைப் பசிதான் நவீன நாகரிகத்தின் விளைவாகும்; இப் பசியைப் போக்கச் செய்யப்படும் முயற்சிகள் வேறு எல்லாவகை யான முயற்சிகளையும் தோற்கடித்து மேலோங்கி விடுகிறது. பேராசையிலிருந்து பாவம் பிறக்கிறது; பாவம் அழிவைத் தருகிறது. பேராசை சமுதாய விரோதமான தூண்டுதலாகும். இவை அனைத்தும் மனிதனுடைய சமுதாய நுண்ணறிவை வலு விழக்கச் செய்கின்றன. ஒவ்வொரு படியிலும் அகமுகப் போராட் டத்தை உண்டாக்குகிறது; மனிதனுடைய சமுதாய வாழ்க்கை யைக் கொடுரமாக வெடிக்கச் செய்து அவனுடைய வாழ்வை முடிக் கின்ற வரையில் இந்த கிரம்பாத பேராசை முடிவுறுவ தில்ஃப். - மேடுைகளில் பெரும் பணம் சேகரிக்கின்றவர்கட்கும், அவ்வாறு அவர்கள் சேர்ப்பதற்குக் கருவிகளாக மட்டும் இருக்கின்ற వీటి வர்கட்கும் இடையே முடிவில்லாத போராட்டம் ஒன்று கடைபெறு கிறது. இந்த முரண்பாட்டைப் போக்கக் கட்டிய வழி ஒன்றுக் தெரியவில்லை. ஏனென்ருல் தொழிலாளரின் பேராசை முதலாளியின் பேராசைக்கு ஒரு சிறிதும் குறையவில்லை. நாகரிகத்தின் நன்மை