பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 அனைத்துலக மனிதனை நோக்கி ஒரு குறிப்பிட்ட வகுப்பினரிடம் அகப்பட்டுள்ள பணத்தின் ஆற்றல்பற்றியும் இதுவே உண்மையாகும். பல மக்களுடைய உழைக்கும் ஆற்றலை தம் கையில் திரட்டி வைத்துள்ளமையின் பனக்காரர்கட்கு இந்த கிலே கிடைத்துள்ளது. பல்வேறு மக்களின் உடல் உழைப்புச் சக்தியே அவர்களுடைய முதலாகும் . அந்த உழைப்பு, செல்வம் என்ற வடிவில், அவர்களிடம் குவிந்து கிடக் கிறது. அந்த உழைப்பின் ஆற்றல்தான் உண்மையான சக்தி யாகும். அந்த ஆற்றல் ஒவ்வொரு உழைப்பாளியிடமும் அமைந்து கிடக்கிறது. அவர்கள் அனைவரும், ' கம்முடைய வலிமை அனைத் தையும் ஒருமைப்படுத்துவோம் ' என்று மட்டும் சொல்லக்கூடுமே யால்ை, அவர்களுடைய உண்மையான மூலதனம் அவர்கள் கையிலேயே இருக்கும். ஒற்றுமைப்பட முடியாதவர்கள் துயரப் பட்டே தீர வேண்டும். பிறரை ஏசுவதலோ அன்றிக் கொள்ளையடிப் பதாலோ எவ்வித நிலையான நன்மையையும் அவர்கள் பெற முடியாது. - - லெளகீக விஷயங்களில் மிக நீண்ட காலமாக மனிதன் தன் மனிதத் தன்மையை இழந்து விட்டான். பேராசையை விரிவு படுத்தவே, அவன், தன்னுடைய வலிமையைப் பயன்படுத்தினன். எண்ணிக்கைக்குள் அடங்காத அடிமைகளைச் செல்வம் என்னும் வண்டியில் பூட்டிச் சவுக்கடி மூலம் முன்னே செலுத்துகின்றனர். இறுதியாக அமிழ்த்தப்பட்ட அந்த மக்கள் தமக்குள்ளாகவே * துண்டுபட்டுக் கிடக்கின்ற எங்கள் சக்தியை, ஒரு சில சக்தி வாய்ந்தவர்கள் தம் கைகளில் தாங்கிக் கொண்டு, எல்லே யற்ற ஆற்றலைப் பெற்று விட்டார்கள். அதனை எதிர்த்துப் போராடி காங்கள் அதனை உடைத்துவிட முடியும். ஆனுல், அதனை மறுபடி யும் ஒன்ருக்க முடியாது எனவே அதனுல் எங்கட்கு ஒன்றும் பயனில்லை. ஆகவே எங்களுடைய உழைப்பாற்றல் அனைத்தையும் ஒன்ருக்கி, அதன்மூலம் அனைவருக்கும் பங்கிடக்கூடிய முறையில் பொருளாதார வசதிகளே ப் பெற வேண்டும் ' என்று கடறிக்கொள் @打町ö56TT。 இதுவே கூட்டுறவின் கொள்கையாகும். இதுவே மனிதன் அறிவுத் துறையில் பெரியவகை ஆகுமாறு செய்தது. அன்ருட நடைமுறையில் அவனுக்கு ஒரு நல்லொழுக்க அடிப்படையைத் தந்ததும் இதுவேயாகும். இந்தக் கொள்கை இல்லாதவிடத்தில் துன்பம், பொருமை, பொய், காட்டுமிராண்டித்தனம், பஞ்சம் என்பவை தோன்றுகின்றன, • -