பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 அனைத்துலக மனிதன. நோக்கி வோம் என்றே எதிர்பார்க்கலாம். இதில் நாம் தோற்றுவிட்டால் நம்முடைய துயரங்களிலிருந்து விடுதலை பெறவும் முடியாது; இது பற்றிப் பிறரைக் குறைகூறவும் முடியாது. - - முற்காலத்தைப்போல அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்கின்ற அளவில் நம் வாழ்க்கைத் தரத்தைக் குறைத் துக்கொண்டால் வறுமையை ஒழித்து விடலாம் என்றும் பேசப்படு கிறது. இது எவ்வாறு உள்ளதென்ருல், ஆழமான அடித்தளத்தில் கிடப்பவன் அதற்குக் கீழ் விழமுடியாது என்பதைப் போன்றுள்ளதே தவிரப் பிரச்னைக்குரிய தீர்வு இதுவன்று. . . - மனிதனுடைய வரலாற்றைப் பார்த்தால், அவன் பின்னேற் றத்தை என்றுமே செய்ததாக அறிய முடியவில்லை. ஒவ்வொரு யுகத்திலும் புதிய புதிய ஆக்கத் தொழில்களில் அவனுடைய அறிவு வெளிப்படலாயிற்று. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாதவர்கள் ஒதுக்கப்பெற்றனர். புதியன புனையும் அவனுடைய ஆற்றலால் புதிய புதிய சக்தர்ப்பங்களைப் படைத்துக்கொள்கிருன் ; எனவே அவனுடைய தேவைகளும் பல்குகின்றன. கலப்பையைக் கண்டு பிடிப்பதற்கு முன்பேகட்ட மனிதன் காட்டிற் கிடைத்த பழங் களையும் வேர்களையும் உண்டு வாழ்ந்து வந்தான். அந்த நேரங் களில் அவனுக்கு எந்தவிதமான குறையும் இருந்ததாக யாரும் கினைத்திருக்கமாட்ட்ார்கள். கலப்பை கண்டுபிடிக்கப்பட்டவுடன் வேளாண்மை செய்வது தொடங்கியது ; அதன் பயனுக வாணிக மும், வியாபாரமும், சட்டங்களும், விதிகளும் தொடர்ந்தன. இதனைத் தொடர்ந்து ஹிம்சை, திருட்டு, கொள்ளே, பொய்க் கையெழுத்து, ஏமாற்றல், பொய் ஆகிய தொல்லைகளும் ஏற்பட்டன. ஆனல் இவற்றின் காரணமாகக் கலப்பையையும் துறந்துவிடவேண்டு மென்று கூறுவது முன்னேறும்பொழுது பின்னே திருப்பிக் கொண்டே செல்லவேண்டும் என்பதுபோலவாகும். சில இனத் தார்கள், புதிய ஆக்க வழிகளில் முன்னேருமல் நிலைத்து கின்று விட்டது பற்றியும், தங்களுடைய பழமையையே பார்த்துக்கொண் டிருந்தது பற்றியும் வரலாறு கடறுகிறது. இறந்தவர்களேவிட இவர் க்ள் மோசமானவர்கள்; ஏனென்ருல் இவர்கள் உயிருடன் இருந்தே இறந்தவர்களாவர். இறந்தவர்கள் செலவு செய்யப் பணம் தேவைப்படுவதில்லை. ஆகவே வறுமைப் பிரச்னைய்ைத் தீர்ப்ப தற்கு மரணம் ஒன்றுதான் வழி என்று கூறிவிட முடியுமா? பழமை யின் மிச்சங்களே வைத்துக்கொண்டு எப்படியாவது வாழவேண்டு மென்பது மனித்னுடைய தலைவிதி.யன்று. மனிதனின் தேவைகள்