பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/405

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 அனைத்துலக மனிதனே நோக்கி களின் வருகை மிக விநோதமான ஒன்ருகும். தனிப்பட்ட முறையில் புதிதாக வந்த் இந்த பிரிட்டிஷார்கள் முஸ்லீம்களைப்போல நம்மை நெருங்காமல், அதிக துரத்திலேயே இருந்தார்கள். ஆனல், ஐரோப்பியப் புத்துணர்ச்சியைக் கொண்டு வருகின்ற தூதுவர்கள் என்ற முறையில், இதற்கு முன்னர் நம்முடைய நாட்டிற்குள் வக்த வர்கள் யாரும் செய்யாத முறையில் மிக ஆழமானதும், விரிவானது மான தொடர்பை இவர்கள் கைக்கொண்டார்கள். ஐரோப்பாவின் இயக்க சக்தி நம்முடைய மனித சக்தியை வலுவாக அடித்தது. வறண்டு போன பூமியில் அடித்துப் பெய்கின்ற தாரையான மழை புதியதொரு கிளர்ச்சியை உண்டாக்கிப் புதிய உயிர்கள் தோன்று மாறு செய்வதுபோல, இந்த ஐரோப்பியப் பண்பாடு வேலை செய்தது. இத்தாலியிலிருந்து புறப்பட்ட மறுமலர்ச்சி ஐரோப்பாக் கண்டம் முழுவதும் பரந்து விரிந்ததைப் போல் இந்தப் புத்துணர்ச்சியும் இங்கே பரவியது. வளம் மிகுந்த பல்வேறு வகையான அதனுடைய பயன்கள் எந்த இடத்திலும் தேசீய கெளரவத்தைக் குறைத்ததாகக் கருதப்பெறவில்லை. இப்புதிய எண்ணத்தின் வளத்தைப் பெற்றுக் கொள்ளக்கட்டிய வாய்ப்புள்ள மனங்கள் இக் கருத்துக்ளேப் பெற வேண்டும். கொடுக்கல், வாங்கல் என்ற அந்த வேகமான ஆறு, எங்கே அறிவு விழிப்புடனும் உயிர்த் துடிப்புடனும் இருக்கின்றதோ, அந்த இடங்களில் வேகமாகப் பாய்கின்றது. நவீன காலத்தின் புத்துணர்ச்சி மேலே நாட்டு ஆகாயத்தில் தோன்றி, உலக வரலாறு முழுவதையும் ஒளி பொருந்தியதாகச் செய்து விட்டது. ஐரோப்பாவின் மனம் ஏதோ ஒரு பெருங் தூண்டு தலால் தூண்டப்பெற்று, உலகத்தின் எல்லாப் பாகங்களிலும், தன்னைத் தானே செலுத்திக் கொண்டது. அது எங்கே யெல்லாம் பரவியதோ, அங்கே யெல்லாம் வெற்றியைக் கண்டது. இத்தகைய ஆற்றலின் ரகசியம் என்ன ? இதற்கு விடை காண வேண்டுமேயாளுல், அந்த ஆற்றல், உண்மையை நாடிச் செய்யும் முயற்சிகளிலேயே அந்த அடங்கி இருக்கிறது. அறிவுத் தேக்கம், பைத்தியக்காரக் கற்பனை, மேற்போக்கான ஒற்றுமை அல்லது மிகப் பழைய காலந்தொட்டு வருகின்ற மெய்யறிவின் எதிரொலி ஆகியவற்ருல் இந்த மேனுட்டு நாகரிகம் மூழ்கடிக்கப்படவில்லை. எடுத்த எடுப்பில் எதனையும் கம்ப வேண்டுமென்று தோன்றுகின்ற மனித உணர்ச்சியை அக்த நாகரிகம் மிக வன்மையாகக் கட்டுப்படுத்தி வருகிறது. தனிப் பட்ட மனிதர்களுடைய சிந்தன சக்தித்கு ஏற்ற முறையில், உண்