பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/417

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. நாகரிகத்தில் நெருக்கடியான நிலை இன்ருேடு என்னுடைய 80-வது ஆண்டு கிறைவெய்துகிறது. இந்த நீண்ட வாழ்நாளப் பின்னே திரும்பிப் பார்த்து என்னுடைய வாழ்க்கையிலும், என்னுடைய காட்டு மக்களின் மனுேதத்துவத் திலும் ஏற்பட்டிருக்கின்ற மாற்றத்தைக் கவனிக்கும் பொழுது, நான் வியப்படைகிறேன். இந்த மாற்றம் வருந்தத்தகுந்த அவல மாகவே இருக்கிறது. பிரிட்டிஷ் இனத்தோடு தொடர்புகொள்ளத் தொடங்கிய காலத்திலிருந்துதான் வெளியிற் காணப்படும் பரந்த உலகத்தோடு நாம் நேரடியாகத் தொடர்பு கொள்ளத் தொடங்கினுேம். நம்மிடத் தில் வரும்பொழுது, உள்ளவாறு அவர்களே காட்டுகின்ற மிகப் பெரிய இலக்கிய மரபுடன் அவர்கள் நம்மிடம் வந்தார்கள். அக் காலத்தில் அவர்களிடத்தில் நாம் கற்ற கல்வி மிகக் குறைவான தாகவும், பலவகைப்படாததாகவும் இருந்து வந்தது. விஞ்ஞானம் நமக்கு அப்பாற்பட்டதாகவே இருந்து வந்தது. ஆங்கில இலக்கி யத்தைக் கற்பதையே முக்கியமான குறிக்கோளாகக் கொண் டிருந்தோம்; அந்த இலக்கியத்தை அனுபவிப்பதுதான் உயர்தரப் பண்பாட்டின் அடையாளமாக இருந்து வந்தது. பர்கி"னுடைய சொல்லாற்றலையும், மெகாலே ’யினுடைய தருக்க முறையையும் ஓயாமல் நாம் எதிரொலித்துக் கொண்டிருந்தோம். ஷேக்ஸ்பியர், பைரன் ஆகியவர்களைப்பற்றி அடிக்கடி வாதம் செய்தோம். அக் காலத்தில் நிலைபெற்றிருந்த மானிட அரசியல் தத்துவங்களேப் பற்றியும் விவாதித்து வந்தோம். நம்முடைய தேசீய விடுதலையைப் பெறவேண்டுமென்று, அப்போதே முடிவு செய்து இருந்ததோடு, நம்முடைய மனத்தின் ஆழத்தில் பிரிட்டிஷார்களுடைய பரந்த மனப் பான்மை பற்றியும் அதிகமான கம்பிக்கை இருந்து வந்தது. தோற் கடிக்கப்பட்டவர்கள், வெற்றி பெற்றவர்களாலேயே விடுதலேயை நோக்கி அழைத்துச் செல்லப் பெறுவார்கள் என்று நம்பி இருந்தோம். பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள், தத்தம் நாடுகளில் ஏற்பட்ட புரட்சிக் காலத்துப் போராட்டங்களில் ஈடுபட்டு, காட்டை விட்டு அகதிகளாக ஓடிவந்தபொழுது இங்கிலாந்து தேசம் இடம் கொடுத்துக் காப்பாற்ற வில்லையா? பிரிட்டிலடிார்களுடைய இத்தகைய மானிடப் பண்பாடு நம்மைப் பொறுத்தவரையில் அதிக மரியாதையைப் பெற்றது. இந்தச் சந்தப்பத்தில் என் இளமைக் காலத்தில் விரிட்டனுக்கு முதன் முறைச் சென்று இருந்ததைப் பற்றியும் கூற விரும்ட