பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/424

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாகரிகத்தில் நெருக்கடியான நிலை 13 டோகும் பொழுது, எத்தகைய மோசமான சேறும், சகதியும், குப்பையும் வெளிப்பட்டு, மிகப் பெரிய ஆற்றல் வீனை வரலாற்றை எடுத்துச் சொல்லும். உண்மையான நாகரிகம் ஐரோப்பாவின் இருதயத்திலிருந்து தான் ஊற்றெடுக்கப் போகிற தென்று நான் நம்பிய காலமும் உண்டு, இன்று இங்த உலகத்தைவிட்டு நான் விடை பெற்றுக் கொள்ள வேண்டிய கேரம் வருகின்ற பொழுது, அந்த கம்பிக்கை பொய்யாய், கனவாய்ப் போய் விட்டது. இந்த நாட்டைக் காக்கின்ற ஒரு புண்ணிய புருஷர் தோன்றப் போகிருர் என்றும், அவர் இந்தியா என்று சொல்லப்படும் இந்த வறுமை கிறைந்த புவியில் கம்மிடையேதான் தோன்றப் போகிருர் என்றும் கான் கம்பிக் கொண்டு வாழ்கின்றேன். அவர் தரப் போகின்ற செய்திக்காக கான் காத்து கிற்கின்றேன். இந்தக் கீழ்த் திசையிலிருந்து அவள் தரப் போகின்ற மிக உயர்ந்த அக்தச் செய்தி, அதனேக் கேட்பவர்கள் அனைவருக்கும் புதியதொரு கம்பிக்கை யையும் சக்தியையும் தரும் என்னும் உறுதி உடையேன். - இறந்த காலம்' என்ற அப்பகுதியை திரும்பிப் பார்க்கும் பொழுது மிகப் பெருமைப்படத்தக்க ஒரு நாகரிகம் இடிந்து, பாழாகி, வரலாற்றின் குப்பைத் தொட்டியாகக் குவிந்து கிடப்பதை கான் காண்கின்றேன். என்ருலும்கூட, மனிதனிடத்தில் கம்பிக்கை இழக்கும் மா பெரும் குற்றத்தை கான் செய்ய மாட்டேன். அவனுடைய தற்காலத் தோல்வியை முடிவான தோல்வியாக நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். இந்தப் பெருங்குழப்பம் முடிந்து, கரு மேகங்களும், உணர்ச்சிப் போரட்டங்களும் ஓய்ந்து, வானம் தூய்மை அடையும் பொழுது, வரலாற்றில் ஒரு திருப்பு மையம் ஏற்படும் என்றே எதிர்ப்பார்க்கின்றேன். இந்தப் புதிய விடிவு காலம், சூரியன் தோன்றுகின்ற இந்தக் கீழ்த் திசையிலிருந்தே ஒருவேளை தோன்றிஞலும் தோன்றலாம். அது தோன்றும் பொழுது என்றுமே தோல்வியை அறியாத மானிடன் தடைகளே யெல்லாம் உடைத் தெறிந்து, தான் இழந்த அந்த மாபெரும் சாம்ராஜ்யத்தை வெற்றி கொள்வதற்காக மறுபடி யும் அடியெடுத்து வைத்துச் செல்லக் கூடும். தந்திரத்தின் தலைகர்வித்தனம் மிகப் பெரும் ஆபத்துக்களுடன் கூடியது என்பதை வெட்ட வெளிச்சமாக்கும் கேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பழங் கால ஞானிகள், உலகத்திற்கு எடுத்துத் கூறிய கீழ்க்கீண்ட உண்மை எவ்வளவு சத்தியமானது ri ^ அந்த பேரம் விளக்கிக் காட்டக்கூடும். கிய