பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/432

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரைகள் கல்வியின் மாறுபாடுகள் . கல்விப் பிரச்னை பற்றிய தாகூரின் முதலாவது கட்டுரை யாகும் இது. 1892-இல் ராஜ ஸ்கானியில் ஒரு பொதுக் கூட்டத்தில் படிக்கப்பட்ட இக் கட்டுரை ஸாதனு ’ என்ற மாதாந்தர இதழில் 1892 டிசம்பரில் வெளியிடப்பெற்றது. பின்னர் சிகூடிா (1908) என்ற நூலில் தொகுக்கப்பட்டது. ஆரம்பக் கல்வி முதல் பல்கலைக் கழகம் வரைக் கல்வியின் எல்லா நிலைகளிலும் வங்காளி மொழியையே போதன மொழி யாகக் கொள்ள வேண்டும் என்பதை வலுவாக ஆதரித்தது இக் கட்டுரை. - - - இக் கட்டுரையின் ஆங்கில மொழி பெயர்ப்பு தலை கீழான கல்வி என்ற தலைப்பில் விஸ்வபாரதி முத்திங்கள்’ இதழில் (நவம்பர் - ஜனவரி 1947) வெளியாயிற்று. , - * . 1. பங்கதர்ஸன்-வங்காளி மொழியில் முதன் முதல் வெளி யான இலக்கிய மாத இதழ். பிரசித்தி பெற்ற வங்காளிப் புதின ஆசிரியராகிய பங்கிம் சந்திர சட்டர்ஜி யால் 1872-இல் தொடங்கப் பெற்றது. 1875-இல் அது கின்று போகும் வரை அவரே அதன் ஆசிரியராக இருந்து வந்தார். 1901-இல் அதனை உயிர்ப்பித்துத் தாகடர் ஏப்ரல் 1906-வரை அதன் ஆசிரியராக இருந்து வந்தார். 2. சூரிய முகியும் கமல மணியும்; சந்திர சேகரும் பிரதாப்பும் பங்கிம் சந்திரரின் புதினத்தில் வரும் பாத்திரங்கள். சமுதாயமும் அரசாங்கமும் - 1904-ம் ஆண்டு ஜூலைத் திங்கள் 22-ஆம் தேதியன்று கல்கத் தாவில் கடந்த பொதுக் கூட்டத்தில் படிக்கப் பெற்றது. பங்க தர்ஸனில் (ஆகஸ்ட் 1904) வெளியிடப் பெற்று, ஆத்ம சக்தி” (1905) என்ற நூலில் சேர்க்கப் பெற்றது. வங்காளத்தில் ஏற்பட்ட தண்ணிர்ப் பஞ்சப் பிரச்னை பற்றி அரசாங்கம் நிறைவேற்றிய தீர்மானமே இக் கட்டுரை தோன்று. வதற்கு உடனடியான தூண்டுதலாய் அமைந்தது.