பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/436

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: குறிப்புரைகள் நூலே இயற்றியுள்ளார். அதிலிருந்துதான் இப்பகுதி எடுக்கப்பெற்றுள்ளது. உலகையே......... எய்துகிருன் - ஈசா உபநிஷதம் 9, 11 இந்த உபநிஷதம் புத்தர் காலத்துக்கும் முற்பட்ட தென்றும், அநேகமாக கி. மு. 8-ம் நூற்ருண்டாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆன்மீக ஒளியால் கிறைந்திருந்த ஞானிகள் மனமுவந்து பாடிய பாடல்கள் 'என்று கருதப்படுவது. மிகச் சுருங்கிய அளவுள்ள 18 பாடல்களை மட்டும் பெற்றிருப்பதால் ஏனைய உபநிஷதங் களைக் காட்டிலும் அளவால் மிகச் சுருங்கிய ஒன்ருகும். இந்த உபநிஷதத்தின் முதல் ஸ்லோகமாகிய இசாவாஸ் யம்’ என்று தொடங்கும் பாடல் தாகூரின் தந்தையாகிய தேவேந்திர நாத்தின் ஆன்மீக வாழ்க்கையில் ஒரு புரட்சியையே உண்டாக்கி விட்டது. தாகடரின் வாழ்க்கை யிலும், அவருடைய தந்தை வாழ்க்கையைப் போல, உப கிஷதங்கள் பெரிய அளவுக்குச் செல்வாக்குப் பெற் றிருந்தன. அவர் ஆற்றிய ஹிப்பர்ட் சொற்பொழிவு களாகிய மனிதனின் சமயம்’ என்பதிலிருந்து இதன அறியலாம். - , தன்...... தாம்-ஈசா உபநிஷதம்: 2. இவ்...... பின்-ஈசா உபநிஷதம் : 1. மனு-மனுஸ்மிருதி: 21.96. எந்த இன்பத்திலிருந்து ..... . செல்வோம்-தைத்ரேய உப கிஷதம் : 3/6. . மரணமிலா . . . . செய்வேன்-பிரஹதாரண்யக உபநிஷதம். 11, iv, 2, 3, v. 3, 4, யாக்ஞவல்கியர் என்ற ஞானி இவ்வுலகைத் துறந்து சக்கியாசம்_வாங்கப் போகிருர். அப்பொழுது அவருடைய மனைவியாகிய மைத்ரேயியை இவ்வுலகப் பொருள்களே ஏற்றுக் கொள்ளுமாறு கூறு கிருர். அப் பொருள்கள் அழிவிலாப் பெரு வாழ்வை நல்குமோ என அந்த அம்மையார் கேட்கிரும். இந்த உலகமும் அதிலுள்ள செல்வ முழுவதும் சேர்ந்து தம் மிடம் வந்தாலும் அவை அழிவிலாப் பெரு வாழ்வை கல்குமோ என அந்த அம்மையார் வின்வுகிரும். அந்த ஞானி முடியாது என்ற விடையைத் தான் கூற 425