பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 - முன்னுரை தொடர்ந்தது. பிரிட்டிஷார்கள் கடைப்பிடித்த பொருளாதாரச் சுரண்டலையும், அரசியல் ஆதிக்கத்தையும் எதிர்க்கும் புரட்சியா கவும் அது விரைவில் மாறிற்று. 1885-ம் ஆண்டில் தாகருக்கு 24 வயதாகும்பொழுது இந்தியத் தேசீயக் காங்கிரஸ் ஸ்தாபிக்கப் பெற்றது. இந்தியாவில் சிவில் உரிமைகளையும் பொதுப்பணிகளில் அதிக இடத்தையும் பெறவேண்டி, முதலில் இது தோன்றிலுைம், நூற்ருண்டின் முடிவில் போராடும் நிறுவனமாக மாறித் தேச விடு தலக்குப் போராடும் நிலையைப் பெற்றுவிட்டது. இருபதாம் நூற் ருண்டின் தொடக்கத்தில் அரசியல் கொலைகள் மூலம் விடுதல் யைப் பெற முயன்ற ஒரு பயங்கர இயக்கம் தோன்றிற்று. எல்லே யற்ற உணர்ச்சி வேகமும், மனக் கசப்பும் கிறைந்திருந்த அந்தக் காலத்தில் தாகடர், புறநிலையில் துறவு மனப்பான்மையுடன் இருக் கும் நிலையைப் பெற்றிருந்தது, அவர் ஆன்ம பலத்தையே காட்டு கிறது. - இந்தியத் தேசீயம் தொடக்கத்திலிருந்தே ஹிந்துப் புன ரமைப்பு இயக்கத்துடன் கலந்தே இருந்துவந்தது. இந்திய சமுதா யத்தில் புரட்சியை உண்டாக்க விரும்பியவர்கள் கூட, காளிதேவி வணக்கத்தைக் கொண்டிருந்தனர். சுதந்திர இந்தியாவைப் பற்றிப் பேசும்பொழுதெல்லாம் ஆதிகால அரசியல் வாதிகளில் பலரும் ஹிந்து சமய தத்துவம், பண்பாடு என்பவற்றின் அடிப்படையி மூலயே பேசினர். பிரிட்டிஷார்கள் கொணர்ந்த கொள்கைகளை வெருட்டி அடிப்பதோடு அல்லாமல் ஹிந்துக்களும், முஸ்லீம்களும் சேர்ந்து வளர்த்த பொது மரபைக்கட்ட வெகுட்டிவிட முயன்ருர்கள். இந்த அரசியல்வாதிகள் இந்தியா என்ற முறையில் பேசினலும் சமுதாயம் என்ற கருத்திலேயே பேசினர் என்பதும் உண்மைதான். தாகூரின் எண்ணங்கூட வங்காளம், வங்காளிகள் என்றே சுற்றி வந்துள்ளதென்பதை இக் கட்டுரையைப் படிக்கின்றவர்கள் கவ விக்க முடியும். சில திறனுய்வாளர்கள் இன்னும் ஒரு படி சென்று 1908 வரைத் தாகடர் இந்தியாவைக்காட்டிலும் வங்காளத்தைப் பற்றியே சிந்தித்தார் என்றும் அவருடைய பரிவெல்லாம் ஹிந்துக் கள் மேலேயே இருந்ததென்றும் கூறுகருக்கள். அன்று வாழ்ந்த மற்றத் தலைவர்களைப்பற்றி என்ன கூறினுலும் இவ்வளவு குறுகிய நோக்கத்தைத் தாகூரின் மேல் ஏற்றுவது சரி. யன்று. மிக ஆழ்ந்த முறையில் ஒரு தெய்வ வணக்கத்தைப் போற்றும் குடும்பச் சூழ்நிலை அவருடைய தேசத்தில் அன்று வாழ்ந்த கிறிஸ்தவ, முஸ்லீம் மக்களிடையே பரிவு கொள்ளச் செய்திருக்கும். இந்தியப் o