பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/455

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446 4. அனைத்துலக மனிதனை நோக்கி பிரிட்டனுக்கு. ...இருந்தது-1878 செப்டம்பரில் தாகூர் முதன் முறையாக இங்கிலாந்து சென்ருர். லண்டன், பல்கலைக் கழகக் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 18 மாதங்கட்குப் பிறகு மீண்டுவிட்டார். அவருடைய என்னுடைய நினைவுகள் : (மாக்மில்ன்ை, 1917) என்ற நூலைப் பார்க்கவும். என்னுடைய கண்களால்-ஜப்பானுக்குத் தாகவுர் 1916; 1924; 1929 ஆகிய ஆண்டுகளில் மும்முறை சென்ருர். முதன் முறை அவருடைய அனுபவங்களே ஜப்பான் யாத்திரை (நாட்குறிப்பு) என்ற நூல் வடிவில் 1919-இல் வெளியிட்டார். - மாஸ்கோ-1980-இல் (செப்டம்பர் 11 - 25 வரை) இரு வார காலம் சோவியத் ரஷ்யாவுக்குச் சென்று வந்தார். மாஸ்கோவில் அவருடைய அனுபவம் பற்றி எழுதிய கடிதங்களேத் தொகுத்து ரஷ்யாவிலிருந்து கடிதங்கள் . என்று 1981-இல் வெளியிட்டார்கள். . ஈரான்-ரெசா ஷா பஹ்ல்வியின் அழைப்பின் பேரில் 1982-இல் தாகடர் ஈரான் சென்று வந்தார்.