பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கல்வியின் மாறுபாடுகள் வாழ்க்கைக்கு, வேண்டிய இன்றியமையாத தேவைகளுடன் மட்டும் மனிதர்கள் அமைதியடைந்துவிட முடியாது. ஓரளவு தத் தம் தேவைகளால் பிணக்கப்பட்டும், ஓரளவு சுதந்திரமாகவும் அவர் கள் வாழ்கின்றனர். சாதாரண சராசரி மனிதன் மூன்றரை முழம் உயரம் இருப்பினும் அதைவிட மிக அதிகமான உயரமுள்ள வீட்டில் குடி இருக்கிருன். அவனுடைய சுகாதாரத்துக்கும், வசதிக்கும், . புழ்க்கத்துக்கும் ஏற்றவகையில் பெரிய வீட்டில் வாழ்கிருன். கல்விக்கும்கட்ட இது முற்றிலும் பொருந்தும். பள்ளிக்ககூடத்திற்குப் படிக்கவேண்டிய பாடப் புத்தகங்களுடன், மாணவன் தானே விரும்பிப் படிக்கும் நூல்களையும் படிக்குமாறு உரிமை வழங்க வேண்டும். இவ்வாறு செய்யாவிட்டால் அவனுடைய மனவளர்ச்சி தடைப்பட்டு, உடலளவில் பெரிய மனிதனுக வளர்ந்தும் மன வளர்ச்சியில் ஒரு பையனைப் போலவே இருக்க நேரிடும். இந்த நாட்டில், ஒரு பையனுக்கு, அவன் விருப்பம்போல் செல. வழிப்பதற்கு மிகக் குறைந்த நேரமே ஒதுக்கி இருப்பது துரதிர்ஷ்டங் தான். மிகச் சுருங்கிய காலத்தில், பிறநாட்டு மொழி ஒன்றைக் கற்று, பல தேர்வுகளில் வெற்றி பெற்று, ஒரு வேலைக்கும் தகுதி யுள்ளவகை அவன் ஆகவேண்டும். எனவே, எல்லை மீறிய வேகத் தில் சில பாடப் புத்தகங்களை உருப் போடுவது தவிர அவன் வேறு என்ன செய்யமுடியும் ? பொழுது போக்குக்காக ஒரு நூலைப் படித்து அவனுடைய பொன்போன்ற காலத்தை வீணடிப்பதை அவன் பெற்றேர்களும், ஆசிரியர்களும் அனுமதிப்பதில்லை. அவனிடத்தில் அத்தகைய புத்தகம் எதையாவது கண்டால் உடனே அதனைப் பறித்துவிடுகின்றனர். வங்காளிப் பையன் பத்திய உணவாகிய இலக்கணம், அகராதி, பூகோளம் என்பவற்றுடன் மட்டும் வாழ வேண்டும் என்று கொடிய விதி வகுத்திருக்கிறது. சூம்பி மெலிந்த கால்களைத் தொங்கவிட்டு ஆட்டிக்கொண்டு வகுப்பறையில் அவன் அமர்ந்திருப் பதைப் பார்க்கும்பொழுது, உலகத்திலேயே மிகுந்த துரதிர்ஷ்டம் பிடித்த பையனைப் பார்க்கின்ருேம். பிறநாடுகளில் அவனே ஒத்த குழந்தைகள் பலவிதமான கேளிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் 'பொழுது, இவன் ஆசிரியருடைய பிரம்படியை உண்ணவேண்டி இருக்கிறது. இந்தப் பிரம்படி உணவிற்கு ஊறுகாயாக ஆசிரியரின் ஏச்சும் பேச்சும் உதவுகின்றன. r