பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 அனைத்துலக மனிதனை நோக்கி அராஜகம் வந்து விட்டாலும், சமுதாயத்தின் சமய, உலகியற் கல்வி பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. அரசன் குளம் தோண்டாமல் இல்லை; ஆனால், சமுதாயத்தின் ஒரு செல்வந்தன் செய்த அதே அளவுதான் அரசனும் செய்தான். அரசன் மட்டும் கவனக் குறைவாக இருப்பினும், அதனுல் குளங்கள் வற்றி வறண்டு போகவில்லை. •. . . - இங்கிலாந்தில் உள்ள மக்கள் தம் இன்பங்களையும், வசதிகளே யும் அனுபவிக்கவும், தங்கள் விருப்பப்படி வாழ்க்கையைக் கொண்டு செலுத்தவும், உரிமை பெற்றுள்ளனர். சமுதாயக் கடமைகள் அரசாங்கத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதால், அவர்கள் அந்தச் சுமையைத் தாங்க வேண்டியதில்லை. இந்தியா வைப் பொறுத்தமட்டில் அரசன்தான் சுதந்திரமாக இருந்தான் ! சமுதாயக் கடமைகள் மக்களிடமே ஒப்படைக்கப் பட்டிருந்தன. அரசன் போரில் ஈடுபட்டிருந்தாலும், வேட்டைக்குச் சென்றிருந்தா லும், அவனுடைய கடமைகளே கன்கு நிறைவேற்றிலுைம், அல்லது இன்ப வேட்டை ஆடினுலும், அவனுடைய செய்கை களின் புண்ணிய பாவங்கட்கு மட்டும் அவன் பொறுப்பாளியாக இருந்தான். தங்கள் சமுதாய நலங்களைப் பொறுத்தமட்டில் மக்கள் அவனே நம்பி வாழவில்லை. இதற்கெதிராகச் சமுதாயத்தில் வாழ்ந்த மக்களின் கடமைகளில் ஒன்ருகச் சமுதாயக் கடமைகள் இடம் பெற்றிருந்தன. இதன் பயனுக, சமுதாயக் கட்டுக் கோப்பு முழுவதிலும் இன்று நாம் தர்மம் என்று சொல்லும் சொல்லின் பொருள் நிரம்பிக் கலந்திருந்தது. ஒவ்வொரு மனிதனும் தன்னடக்கம் என்ற கட்டுப் பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டி இருந்தது. கடமைகளின் உயர்வையும் தூய்மையான தன்மையையும் ஒவ்வொரு மனிதனும் ஏற்றுக் கொள்ள வேண்டி இருந்தது. பல்வேறு நாகரிகங்களின் அடிப்படையான பலமும் பல்வேறு வகைகளில் அமைந்து கிடந்தது. எங்கு மக்களின் கலன் குவிந்து கிடக்கிறதோ அங்குதான் காட்டின் இருதயமும் இயங்குகிறது. இங்கிலாந்தில் துரைத்தனம் வீழ்ந்தால், தேசமே ஆபத்திற்கு உள்ளாகலாம். அதல்ை தான், அந்த காட்டில் அரசியலே அவ்வளவு முக்கியமானதாக எடுத்துக் கொள்கிருர்கள். நம்முடைய நாட்டைப் பொறுத்தமட்டில், சமுதாயக் கட்டுக்கோப்பு- அதாவது சமாஜம்’ குலந்தால்தான் தேசத்திற்கு ஆபத்து உண்டாகும். அதல்ைதான்,