பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமுதாயமும் அரசாங்கமும் - 55 படும் புகழுரைகள், அரசன் தருகின்ற மிக உயர்ந்த பட்டத்தைக் காட்டிலும் உயர்ந்தவையாக மதிக்கப்பட்டன. - இத்தகைய மதிப்பை இப்பொழுது நாம் சட்டை செய்யாத காரணத்தால், நம்முடைய காட்டு மக்களுக்காகச் செய்யப்படும் முயற்சியையும் விட்டு விட்டோம். அரசனுடைய ஆசீர்வாதமும், பிச்சையும் இப்ப்ொழுது 'தள்ள முடியாத தேவையாகி விட்டன. தண்ணீர்த் தேவையைத் தீர்க்க வேண்டுமானுல், அதற்குரிய ஊக்கத்தையும் அரசனே உண்டாக்க வேண்டும். பிரிட்டிஷாரிடம் நம் ஆன்மாவை ஒப்படைத்து அடிமைச் சீட்டும் எழுதி விட்டோம். நம்முடைய உயர்ந்த ரச ஞானத்தை ஆங்கிலேயரின் கடைகளில் விற்று விட்டது போலவே ஆன்மாவையும் விற்று விட்டோம். - ஒருவேளை சிலர் என்னைத் தவருகப் புரிந்து கொள்ளவும் கூடும் என்று கினைக்கிறேன். நாம் அனைவரும் நம் கிராமங்களே விட்டு வெளியே சென்று அறிவு, கெளரவம், செல்வம் ஆகியவற்றைத் தேடத் தேவை இல்லை என்ருே, நாம் ஒவ்வொருவரும் பிறந்த மண்ணே விட்டுப் போகாமல் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்ருே கான் கூறவில்லை. வங்காள மக்களை வெளியே வரச் செய்து, அவர்களுடைய மறைந்து கிடக்கும் சக்திகளைத் தட்டி எழுப்பி, அவர்கள் மேற்கொள்ளும் பணிகளே விஸ்தரிக்கச் செய்வ தன் மூலம், அவர்களின் மனத்தை விரிவடையச் செய்யும் சக்தி களுக்கு நாம் நன்றி பாராட்டுகிருேம். வீட்டுக்கும், வெளிநாட்டுக் கும் இயற்கையாக உள்ள உறவை நம் மக்களுக்கு கினைவூட்ட வேண்டிய காலம் வந்துள்ளது. திரை கடலோடித் திரவியக் தேடி, அந்த ஊதியத்தை எடுத்துக் கொண்டு சொந்த இடத்திற்கு வர வேண்டும். ஒருவருடைய முயற்சிகள் வெளி நாட்டில் படர்ந் தாலும், உள்ளம் வீட்டிலேயே கிலே பெற்றிருக்க வேண்டும். வெளி காட்டில் கற்றுக் கொண்டதை உள்ளுரில் பயன்படுத்த வேண்டும். ஆணுல், இன்றுள்ள நாம், வீடு, வெளி நாடு, உறவினர், அங்கியர் என்ற முறையைத் தலைகீழாக்கி விட்டோம். நம்முடைய காரியங்களில் ஏற்பட்டுள்ள குழப்பங்கட்கு மாகாண மாநாடுகள்’ ஒரு சிறந்த உதாரணமாகும். நாட்டிற்கு ஒரு செய்தியை விடுக்கவே இந்த மாநாடு கட்டுகிறது என்ருலும், அது பயன்படுத்தும் மொழி அங்கிய மொழியாகும். ஆங்கிலம் கற்றவர்களைப்பற்றி மட்டுமே நாம் கவலை கொள்வதாகத் தெரி கிறது. பொது மக்களுக்கும் நமக்கும் இடையே உடைக்க முடியாத குறுக்குச் சுவரை ஏற்படுத்தியுள்ளோம்.