பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் இரண்டு ஆண்டுகட்கு முன்னர், ரவீந்தரநாத் தாகடரின் நூருவது பிறந்த நாள் விழாவை உலகம் முழுவதிலும் கொண்டாடு வது பற்றித் திட்டம் வகுக்கப்பட்டது. அப்பொழுது, போர்ட் பவுண்டேஷனின் இந்தியக் கிளேயினர், இவ் விழாவிற்கு ஏற்ற முறையில், எந்த விதமாகத் தாங்கள் உதவலாம் என்று பிரதம அமைச்சர் நேருவையும், உப ராஷ்ட்ரபதி டாக்டர் இராதா கிருஷ்ணனையும் கலந்து ஆலோசித்தனர். - தற்கால சமுதாயப் பிரச்னைகள் பற்றிய தாகடரின் எழுத் தோவியங்களைச் சேகரித்து ஒரு நினைவு மலர் வெளியிடுவதே, பவுண்டேஷனின் இந்தியக் கிளையினர், இந்தியாவில் செய்து வரும் தொண்டிற்கு ஏற்ற செயலாகும். பிரசித்தி பெற்ற இத் தேசபக்தக் கவிஞர் இத் துறையில் இந்தியாவிற்கும், உலகிற்கும் புதிய சில பாதைகளே வகுத்துக் கொடுத்துள்ளார். இத் துறையில் அவர் எழுதிய முக்கியமான எழுத்துக்கள் ஒன்ருகச் சேர்க்கப்படவில்லை ; சில மொழிபெயர்க்கப்படக்கூட இல்லை. - - இவற்றுள் முக்கியமானவற்றை ஒன்ருகச் சேர்த்து நூல் வடிவில் வெளியிடுவதன் மூலம், இன்றைய இந்தியாவின் பல்வேறு சமுதாயப் பிரச்னைகளுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் தீர்வு காண முற்படுபவர்கட்கு உதவுவது சிறந்ததாகப்பட்டது. மேலும் இந்தியாவிலும், பிற நாடுகளிலும் வாழ்பவர் பலர் தாகடரை ஒரு கவிஞராக அறிந்திருந்தனரே யன்றி, இந்தியாவின் சமுதாய முன் னேற்றத்திற்கு வழிகோலிய பெரியவர்களில் அவரும் ஒருவர் என அறிந்திருக்கவில்லை. இந்த நினைவு மலரைத் தயாரித்து வெளியிடும் பொறுப்பை, இதற்கெனவே கூடிய தாகடர் கழகத்திடம் ஒப்புவிக்கும் நல்ல பேறு. வங்காள மொழிப் புலவரும் இப்பொழுது இந்தியாவின், விஞ்ஞான, பண்பாட்டுத் துறை அமைச்சரும் ஆன பேராசிரியர் ஹ-மாயூன் கபீர் தலைமை வகிக்கிருர். இந்த வெளியீட்டுக்குரியவற்றைத் தயாரித்து, தொகுத்து, மொழிபெயர்த்து வெளியிடுவதற்கு, இக் கழகம் பவுண்டேஷனிலிருந்து மானியம் பெறுகின்றது. இந்த வெளி பீட்டின் சிறப்புகள் அனைத்திற்கும் உரியபெருமை, தாகூர் கழகத் عاصمسw.r........-.