பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 அனத்துலக மனிதன நோக்கி வெளிநாட்டார்கள் இப் புதிய சமயத்தால் கவரப்பட்டு இங்கு வந்த பொழுது அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டனர் இவர் கள். ஒற்றுமையின் வலிமை, வேற்றுமையைவிடச் சக்தி வாய்க் தது. ஒற்றுமைக் கணத்தில் அனைத்தும் ஒருமுகப்பட்டுள்ளன. இதுதான் புத்தசமய காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியாகும். ஆசியா முழுவதும் பரவிய சமய உணர்ச்சி வெள்ளத்தில், பல இனத்தா ருடைய சமய உணர்ச்சிகள், மரபுகள், புழக்க வழக்கங்கள், கிறு வனங்கள் ஆகியவைகள் இந்தியாவுக்குள் பாய்ந்தன ; அவற்றைத் தடுத்து நிறுத்த யாரும் அங்கில்லை. - இந்தப் பெருங் குழப்பத்தின் இடையேகூட, பலவற்றையுங் கொண்டு ஒரு கலவையைச் செய்யும் இந்தியாவின் சக்தி அதனை விட்டுப் போய்விடவில்லை. மற்றும் ஒருமுறை, தன்னிடமுள்ளவற் றையும், விருந்தினர்களிடமிருந்து வந்தவற்றையும் ஒன்று கலந்து இந்தியா, மறுபடியும் தனது சமுதாயத்தைப் புனரமைப்புச் செய்யத் - தொடங்கியது. எனவே, அப் புதுச் சமுதாயம் பழையதைக் காட்டி லும் வளம் மிகுந்ததாய் அமைந்தது. எங்கும் காண்ப்பட்ட இந்தப் பரந்துள்ள கலவையில் தனது ஒற்றுமை முத்திரையைப் பதித்தது இந்தியா. இன்று சிலர் பின் வருமாறு கேட்கின்றனர். அகத்தினுள் பல மாறுபாடுகளை உடையதும், பலரும் பிரிந்து சென்று வேறு மதங்கட்குச் செல்ல இடங்தருவதும் ஆன இந்த ஹிந்து சமுதாயத்திலும் சம்யத்திலும் ஒற்றுமை என்று கூறப்படுவது என்ன இருக்கிறது?’ இது ஒரு கடினமான கேள்விதான். மிகப் பெரிய வட்டம் ஒன்றின் மையப் புள்ளியைக் காண்பது எவ்வளவு கடினமோ அவ்வளவு கடின மானதுதான் இந்த ஒற்றுமை எங்கேயுள்ளது என்று காண்பதும் என்ருலும், ள்ப்படியும் வட்டத்திற்கு ஒரு மையப் புள்ளி இருந்து தான் ஆக வேண்டும். ஒரு சிறிய உருண்டையின் வட்ட வடிவத் தைக் கண்ணுல் காண்பது எளிது. ஆல்ை உருண்டை வடிவமான பூமியைப் பகுதி பகுதியாகக் காண்பவர்கட்கு அது தட்டையாகவே காட்சியளிக்கும். அதேபோல ஒன்றுக் கொன்ற பொருங்காக புல மாறுபாடுகளத் தன்னுள் அடக்கி வைத்திருப்பதால், அதனிட முள்ள ஒற்றுமைத் தளே அதனுடம்பின் ஆழத்தில் எங்கோ புதைக் திருக்க வேண்டும். இங்கேதான் இருக்கிறது என்று அந்த ஒற்று மையைச் சுட்டிக்காட்ட முடியாவிட்டாலும், புறத்தே காணப்படும் மாறுபாடுகளின் இடையே அது இருந்து வருவதை நாம் உணர முடியும்,