பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 அனைத்துலக மனிதனே நோக்கி கொண்டிருந்த நமது சமுதாயத்தைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த பாதுகாப்பு வேலி பிரிட்டிஷாரின் படை எடுப்பின் எதிரே நிற்க முடியாமல் பல இடங்களில் பிளந்தது. நாம் இதுவரை எந்த வெளி உலகைக் கண்டு அஞ்சிகின்ருேமோ, அந்த வெளி யுலகம் அந்தப் பிளவுகளின் வழியே உள்ளே பாய்ந்தது. யார் அதனைத் தடுத்துத் திருப்பி அனுப்ப முடியும் ? நம்முடைய மதில் சுவர்கள் பொடி சூரணமாகும்பொழுது இரண்டு விஷயங்களே அறிந்து கொண்டோம். ஒரு காலத்தில் எவ்வளவு சிறந்த சக்தி நம்மிடம் இருந்தது என்ப தொன்று ; அந்தச் சக்தியை இழந்த பிறகு நாம் எவ்வளவு பல வீனர்களாக ஆகி விட்டோம் என்பதே மற்ருென்று. - நீண்ட தூரத்தில் ஒருவன் தன்ன மறைத்துக் கொள்வது தற் காப்பு ஆகாது என்பதையும் அறிந்திருக்கிருேம் இன்று. உண்மை யாக ஒருவர் தற்காத்துக்கொள்ள வேண்டுமாயின் உள்ளே அடங்கி கிடக்கும் சக்தியைத் தூண்டி விட வேண்டும். நம்மிடம் மண்டிக் கிடக்கும் ஜட சக்தியை உதறி எறிகின்றவரை, பிரிட்டன் நம்முடைய ஆன்மாவை அடிமைத் தளையில் வைத்திருந்தே தீரும். ஒரு மூலையில் அமர்ந்து நமது கஷ்டத்தை நினைத்து ஒப்பாரி வைப்ப தால் பயன் ஒன்றும் விளையப்போவ தில்லை. பிரிட்டிஷாரைக் காப்பியடித்து ஒரு மாறுவேடத்தை புனேந்து கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும். உண்மையான பொருளில் ஆங் கிலேயராக நாம் ஆக முடியாது ; ஆங்கிலேயரைப் போல் வேடம் அணிந்து கொள்வதால், நாம் அவர்களே ஏமாற்றி விடவும் 3- முடியாது. - நம்முடைய அறிவு, உணர்வு, ரசஞானம் ஆகியவற்றை பிரிட் டிஷார்கள் குறைத்து மதிப்பிடாமல் இருக்கச் செய்ய ஒரே வழிதான் உண்டு. நம்முடைய முழு வன்மையோடும், சுறுசுறுப்போடும், மனச்சான்ருேடும் நம்முடைய உண்மைச் சொரூபத்தைப் பெற பிற நாட்டாரின் தாக்குதலின் எதிரே, நம்முள் அடங்கி இருக்கின்ற சக்திகளே வெளிப்படுத்த வேண்டும். பழங்கால இந்திய ரிஷிகள்" தன்னடக்கக் கட்டுப்பாட்டின் மூலமாகப் பெற்ற விலை யிலாச் சக்திகளை உலகம் விரும்பி நிற்கிறது. இந்தச் சக்திகள் விணுவதற்கு ஆண்டவன் ஒப்ப மாட்டான். ஆதலால்தான் காலம் வந்தவுடன், இந்தத் துன்பத்தை நமக்குத் தந்து கம்மை எழுப்பி விட்டான், - -