பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கல்விப் பிரச்னை இந்த நாட்டில், இப்பொழுது நம்மால் பள்ளிக்கட்டம் என்று சொல்லப்படும் இடம், உண்மையிலேயே ஒரு தொழிற்சாலையாகும். ஆசிரியர்கள் என்பவர்கள் அதன் பகுதியாவார்கள். காலை 10 மணி யளவில் மணி அடிப்பதுடன் தொழிற்சாலை திறக்கப்படுகிறது. பிறகு ஆசிரியர்கள் பேசத் தொடங்குவதையே யந்திரங்கள் வேலை செய்யத் தொடங்குவதாகக் கருதலாம். மாலை 4 மணிக்கு ஆசிரி யர்கள் பேச்சை முடிக்கிருர்கள்; அதாவது தொழிற்சாலை மூடப் பட்டு மாளுக்கர்கள் யந்திரம் போலக் கற்றுக்கொண்ட சில குறிப்புகிளுடன் வீட்டுக்குச் செல்கிருர்கள். பின்னர் ஒரு சமயம் பரீட்சைகளின் மூலம் இந்தப் படிப்பு ஆராயப்பட்டு ஒரு முத்தி ரையும் இடப்படுகிறது. . . . தொழிற்சாலையைப் பொறுத்தமட்டில் ஒரு வசதி என்ன வென்ருல், நாம் விரும்பியபடி பொருள்களே அது செய்து கொடுக் கும். பல்வேறு யந்திரங்களால் பொருள்கள் உற்பத்தி செய்யப் புட்டிருந்தாலும்கூட ஒன்றற்கொன்று அதிக வித்தியாசம் இராது; ஆதலால், செய்யப்பட்ட பொருள்களுக்கு முத்திரையிடுவதும் - எளிதாகும். ஆல்ை, ஒரு மனிதனுக்கும் மற்ருெரு மனிதனுக்கும் அதிகப் படியான வேற்றுமை உண்டு ; அன்றியும், ஒரே மனிதன் கடடப் பல் வேறு நாட்களில் ஒரே விதமாக இருப்பதில்லை. - மேலும், மனிதர்களிடமிருந்து நாம் பெறுகின்ற பொருள்களே யத்திரங்களிலிருந்து பெற முடியாது. நமக்கு எதிரேயுள்ள ஓர் இயந்திரம் ஒரு பொருளே வைத்திருக்குமே தவிர, கைநீட்டி நம்மிடம் கொடுக்க அதற்குச் சக்தி இல்லை. நமக்குத் தேவைப்பட்ட விளக்கை ஏற்றுவதற்குத் தேவையான எண்ணெயை அந்த இயந்திரம் தரக் கூடுமே தவிர, அதல்ை விளக்கை ஏற்றித் தரமுடியாது. ஐரோப்பிய காட்டில், பிள்ளைகளின் மன வளர்ச்சியில், பள்ளிக் கூடங்கள் மிகச் சிறு பங்கே ஏற்றுக்கொள்ளுகின்றன. அதில் பெரும் பங்கு, பிள்ளைகள் வளருகின்ற நாட்டின் சுற்றுச்சூழ்நிலையைப் பொறுத்திருக்கிறது. ஐரோப்பியக் கல்வி, வாழ்க்கையோடு தொடர் பில்லால் இருப்பதற்குப் பதிலாக, வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே அமைந்திருக்கிறது. சமுதாயத்திலேயே தோன்றி வளர்ந்து, சுற்றி வந்து, அந்த மக்கள் அன்ருட வாழ்க்கையில் செய்யும் காரியங்கள்