பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 அனைத்துலக மனிதனை நோக்கி என்று கினப்பது பொருத்தமற்றதாகும். இத்தகைய முயற்சி, இள .. மனங்களின் இயற்கையான வளர்ச்சியையும், புதுமையையும், எல்லே மீறிய பொய்களாலும், எதிர்பார்த்தல்களாலும் கெடுக்க முனைவதாகும். c பிரம்மச்சரியம் வெறும் போதனமட்டு மல்லாமல் உண்மையான சக்தியையும் தருகிறது. நல்லொழுக்கம் என்பது வாழ்க்கைக்கு ஏதோ அலங்காரமாக இல்லாமல் அதன் இன்றியமையாத தேவை களுள் ஒன்று என்றும் பிரம்மச்சரியம் கூறுகிறது. இதனைக் கடைப் பிடிக்கிறவன் சமயத்தையும், மதத்தையும் ஏதோ பிற பொருள் களாகக் கருதாமல் ஓர் உண்மை கண்பனிடத்தில் ஒட்டிக்கொள்வது போலத் தன்னுடைய விருப்பத்தோடு ஏற்றுக்கொள்ளுகிருன். ஒரு மாளுக்கனுடைய மனத்தையும், கடத்தையையும் நன்கு வளர்ப்ப தற்கு நல்லொழுக்க போதனை தேவையில்லை. நட்பு முறையில் கிடைக்கும் கல்வழியும் சிறந்த சுற்றுச் சூழ்நிலையுமே தேவைப்படு கின்றன. • பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பது மட்டுமல்லாமல், மாளுக் கன், இயற்கையின் நடுவே வாழ்கின்றன். நகரங்கள் கம்முடைய இயற்கையான வாசஸ்தலங்கள் அல்ல ; அவை நம்முடைய உலகா யதத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உண்டாக்கப்பட்டவை தாம். நகரங்களில் பிறந்து செங்கல், சுண்ணும்பு இவற்றினிடையே நாம் வளரவேண்டுமென்று திருவருள் கினைக்கவில்லை. இயற்கை யின் மடிகளில் தவழ்கின்ற நம்மைப் பற்றி யிழுத்து, நகரங்கள் தங்க ளுடைய பசிக்கு இரையாக்கிக்கொள்கின்றன. . நகரங்களில் வசிக்கின்றவர்கள், நகர வேலைகளில் ஈடுபடுகின்றவர்கள் தங்க ளுடைய வாழ்க்கையில் எதுவும் குறையிருப்பதாகவே கினைப்பது இல்லை. அன்றியும், இந்தப் பரந்த உலகத்திலிருந்து ஒவ்வொரு நாளும் அவர்கள் துரத்தில் பேய்க்கொண்டிருக்கிருர்கள் என்பதை யும் அவர்களால் உணர முடிவதில்லை. அவர்கள் வளர்ச்சி அடைகின்ற நேரத்தில் இயற்கையின் உதவி மிக இன்றியமையாது தேவைப்படுகின்றது. ஏனய உலக விஷயங்களாகிய சூழலில் நாம் தள்ளப்படுவதற்கு முன்னர், பற் கையின் இந்த உதவி மிகமிகத் தேவை. அமர்கின்ற நாற்காலிகள், கரும் பலகைகள், புத்தகங்கள், பரீட்சைகள் ஆகியவற்றைப் போலவே மரங்கள், ஆறுகள், நீல ஆகாயம், இனிய காட்சிகள் ஆகியவை மிகவும் தேவையானவை.