பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விப் பிரச்னை 77 மிகப் பழங்காலக்தொட்டே, இந்தியர்களின் மனம், இயற்கை யோடு இடைவிடாது தொடர்புகொண்டு தாவர உயிர்களோடும் விலங்கு உயிர்களோடும் ஒன்றி இருக்கின்ற கிலேயில் வளர்ந்து வந்துள்ளது. புராதன் இந்தியாவில் இளந் துறவிகள் கீழ்க் கண்டவாறு பாடியதாக அறிகின்ருேம் : நெருப்பிலும் நீரிலும் மரத்திலும் செடியிலும் விருப்புடன் இயற்கையாய் மண்ணிலும் நீண்ட அண்டத் திலும்உறை ஆண்டவன் எதிரே தலைவணங் கிடுவோம் தலைவணங் கிடுவோம் : மண், நீர், காற்று, நெருப்பு ஆகிய நான்கு பூதங்களும் ஒரு முழுத்தன்மை பெற்றுப் பரமாத்மாவோடு தொடர்புடையவையாய் விளங்குகின்றன ; இந்த ஞானத்தை நகரங்களிலுள்ள பள்ளிக் கூடங்களின் மூலம் யாரும் பெற முடியாது. நகரத்திலுள்ள ஒரு பள்ளிக்கட்டம் வெறும் தொழிற்சாலையாக அமைந்து, இந்த உலகம் முழுவதையும் ஓர் இயந்திரம்ாகக் கருதும் நாகரிகத்தையே நமக்குக் கற்பிக்கின்றது. நடைமுறை வாழ்க்கையையே பெரிதாகக் கருதும் மக்கள், இதுபோன்ற கருத்தை, குழப்பத்தைத் தருகின்ற மெய்ப்பொருள் உணர்வு வாதமாகவே கருதுவர். ஆனல், அவர்கள்கூட நீலவானம், காற்று, மரங்கள், பூக்கள் ஆகியவை ஒரு மாணுக்கனின் மன, உடல் வளர்ச்சிக்கு மிக முக்கியமானவை என்பதை மறுக்க முடியாது. ஜன நெரிசலுடைய ஒரு நகரத்தில் ஏதோ ஒர் அலுவலகத்தில் மிகச் சுறுசுறுப்போடு வேலை செய்கின்றவர்கள் இயற்கையோடு மிகவும் நெருங்கிய தொடர்பு கொள்ள முடியாது. ஆகவே, இளைஞ ராக இருக்கும்போது, அதாவது நம்முடைய மனம் கற்றுக்கொள் ளும் விருப்பத்தோடு பொறி புலன்கள் தீவிரமாக வேலை செய்கின்ற நேரத்தில், அவை இயற்கையின் ஆட்சியின் கீழ் அவசியம இருக்க வேண்டுமென்பது ஒன்கு விளங்கும். தாய்ப் பாலோடு வளர்கின்ற காம், மண், நீர், ஆகாயம், காற்று ஆகியவற்ருலும் வளர்க்கப்பட்டா லொழிய, முழுத்தன்மை பெற்ற மனிதர்களாக வர முடியாது. ஆகவே, சூரிய வெளிச்சமும், மேகமும் விளையாடுகின்ற திறந்த வெளிகளில் குழந்தைகள் கன்கு விளையாடட்டும். மிக உயர்ந்த ஆன்மாவாகிய பூமாவிடமிருந்து குழந்தைகளைப் பிரிக்கவேண்டா : காலக் கதிரவன் ஒளிக் கதிர்களாகிய நீண்ட கைகளே நீட்டிக் காலப் பொழுதைத் திறக்கின்ற காட்சியையும், மாலேநேரம் மெள்ள மெள்ள விண்மீன்கள் பூத்துக் குலுங்குகின்ற இரவுப் படுக்கையை