பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விப் பிரச்னை . 8 ፲ வாகக் கிட்ைக்கின்ற பொருள்கள் நம் நாட்டில் விலையுயர்ந்தவை யாக உள்ளன. பொது வாழ்வில் வசதிகளுக்குத் தேவையான வேலைகளுக்குத் திட்டம் போடும்போது, வீடுகள் தட்டுமுட்டுச் சாமான்கள் ஆகிய பொருள்களில் அதிக கவனம் செலுத்தி, அவற் றிற்கு எவ்வளவு செலவாகும் என்பதிலேயே மண்டையை உடைத் துக் கொள்கிருேம். இவை மிக இன்றியமையாதவை யல்ல என் பதை அறியவேண்டும். மண் குடிசையில்தான் தங்கி வேலையைத் தொடங்குவோம் என்றும், நம்முடைய கூட்டங்களைத் தரையில் உட்கார்ந்து கொண்டே நடத்துவோம் என்றும் சொல்வதற்கு நமக்கு ஏன் மனத் திடம் இல்லை ? அவ்வாறு செய்தால், நாம் மேற் கொண்ட வேலையின் மேல் ஏவும் கருத்தை ஒரு சிறிதும் குறைக் காமல், ஆனல் செலவழிக்கின்ற சக்தியில் பாதியை மிச்சம் பிடித்து 'விட முடியும். இன்றுள்ள சூழ்நிலையில் எல்லையற்ற நிதி ஆதாரங் களையும், நிதி வசதிகளேயும் உடைய ஐரோப்பிய நாடுகளைப்போலப் பிரம்மாண்டமான திட்டங்களே வகுத்தாலொழிய சாதாரணத் திட்டங் களை வகுக்க காம் வெட்கப்படுகின்ருேம். இவ்வாறு செய்வதால், கம்மிடத்தில் கிடைக்கக்கூடிய குறைந்த அளவு ஆதாரத்தைச் சுற்றுச் சூழ்நிலை வேலைகளுக்குச் செலவழித்துவிட்டு, உண்மை யான வேலையை மேற்கொள்ளும்பொழுது நிதி ஆதாரம் கிடைக் காமல் தொல்லேப் படுகிருேம். - படிக்கின்ற பையனுக்கு ஒரு துண்டுச் சாக்குக் கட்டியும், எழுது வதற்குத் தரையும் மட்டும் தேவையா யிருந்த வரையில் கம்முடைய காட்டில் பள்ளிக்ககூடங்களுக்குப் பஞ்ச மில்லாமல் இருந்தது ; ఇఅయ இப்போது அளவுக்கு மிஞ்சிய சிலேட் பலகைகளும், பென்சில்களும் கிடைக்கின்றன. ஆளுல், பள்ளிக்கூடங்களுக்குத்தான் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. இன்றியமையாத தேவைப் பொருள்களே விட்டுவிட்டு, தேவையில்லாத பொருள்களின் மேல் அதிக கவனம் செலுத்துகின்ற பழக்கமே வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் இப்போது முடிவாகக் காணப்படுகிறது. நம்முடைய முன்னேர்கள், சமுதாயக் கடமைகளில் அதிக கவனம் செலுத்தினுர்களே தவிர அதனுடைய புற நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்திய தாகத் தெரியவில்லே. ஆளுல், இன்று அதற்கு கேர்மாருக காம் கடந்து கொள்கின்ருேம். தட்டுமுட்டுச் சாமான்களே அவர்கள் செல் வத்தின் அறிகுறியாகக் கருதிஞர்களே தவிர, நாகரிகத்தின் அறிகுறி யாகக் கருதவில்லை. நாகரிகத்தின் அன்றையப் பாதுகாவலர்கள் தங்களுடைய வீடுகளில் மிகக் குறைந்த அளவே மேஜை, நாற்காலி