பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.- 123 அவள் அமைதியைத் துணை சேர்த்திருந்தாள். பின் வான் திறந்தாள். "மச்சானுக்குக் கோவம்! ... அவுகளுக்கு சிலட்டு: போய் வாரதுக்கு தாரதாச் சொன்ன வண்டியை அறந்தாகி கிக்கு ஒட்டிக்கிட்டுப் போயிட்டதாலே ரொம்ப சள்ளைப்பட்டுக் கிட்டாங்க. கெஞ்சிக் கூப்பிட்டுப் பார்த்தேன். வாரதாச் "சொல்லியும் வரல்லே. ரெண்டுதரம் போய்ப் பார்த்தேன். ரெண்டு தக்கமும் வீடு பூட்டிக் கெடந்துச்சுங்க!" என்ருள், சாவதானமான தொனியில். என்ருலும் அக்குரலின் அடியின் அடிநாதமிட்ட துயர இழையைப் பிடித்துக்கொண்டார், அம்பு லம். அப்படியே அரைக்கால் நாழிகை வாய் மூடி ஊமையா ஒர். பிறகு மாணிக்கம் ஆழ்ந்து துங்குவதைக் கண்டார். f "நாலு ஊர்த் தண்ணி குடிச்சும் இன்னும் இது க்குப் புவி யலையே! ... உயிராபத்தின்னு வண்டியை ஒட்டிக்கிட்டுப் போன துக்கா கோபப்படுது?... அது போல நானும் கோபே காட்டலாமா? கூடாது!...... அன்னம், நீ வருத்தப் படாதேம்மா! நொடியிலே போய் கையைப் பிடிச்சு இழுத்துக் கிட்டு வந்துப்புடுறேன். ஆத்தா!... இனிமே பலகாரம்தான் சாப்பிடுவாங்க மாப்புள்ளை, தோசைக் கல்லே வை. பணியாரத் தைச் சுடு ஒரு மிளகாய்ப் பொடித் தோசையும் ஒரு பொன் முறுகல் தோசையும் சுட்டுப்புடனும் அவுக தலையைக் கண்டு கல்லை வைக்கலாம்... அடுப்பிலே! ... ஆமா, நீ விரதம் பிடுச் சியில்லே?" என்று கேட்டார். • ' ' ' : " . . . . அவள் "ஆம்" என்ருள். ஆளுல் உள்ளே போய்த் திரும்பிய கிழவர், "பொய்தானே சொன்னே? ஒன் மச்சான் சாப்பிடாததாலே பட்டினி இருந் திட்டே இல்லே?. இந்த அன்போட மகிமை அந்தப் புள் ளைக்குப் புரியலையே?... ம்... நீ போய் ஆகவேண்டியதைக் கவனி. அப்பன் சொல்லுறதைத் தட்டப்புடாது. முதலிலே ரெண்டு தோசையைச் சுட்டு வாயிலே போட்டுக்க வயகன் பொண்ணு பசி தாங்கப்புடாது. ஒன் ஆத்தாள இருக்கிரு. ஒனக்கு யோசனை சொல்ல? காப்பிடு ஆத்தர்!" என்றும்ானது வேதனை மூளச் சொன்னர்.