பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 அம்பலம் ஒருகணம் தம் மகளை ஊடுருவி விழித்தார். பதில் என்ன கொடுப்பது என்று புரியாமல் புதிர் சூழ இருந்தது. அவ ரது பார்வை. பிறகு தோல் உரிந்திருந்த உதடுகளைத் தடி விக்கொண்டார். அவிழ்ந்திருந்த குடுமியைத் தட்டி முடிந்து கொண்டார். பின்னர் பேசத் தொடங்கினர். "ஆத்தா, நீதான் ஒன்னைப்பத்திச் சொல்லவேனும், ஒன் னைப்பத்திப் பேச ஒனக்குத்தான் தெரியும். அல்லாத்துக்கும் சப் - டுப்புட்டுன்னு ஒரு வழி செய்ய வேணுமே!... வாயைத் தொறந்து சொல்லிப்புடு, மனசைத் தொறந்து பேசிப்பிடு, ஆத்தா!..." என்று புகன்ருர், ஆதியப்ப அம்பலகாரர். அவரு டைய உள்மனம் அடித்துக்கொண்டது. மூச்சு முட்டி அடக்க inst & வெளிப்பட்டது. அடித் தொண்டையிலிருந்து புகைச்சல் இருமல் புறப்பட்டது. சோகம் மண்டிய லேசான புன்னகை தூவி, ஊம். பேசு, ஆத்தா” என்று தூண்டினர். ' அன்னக்கிளியின் கண்கள் வாசற்புறம் சென்று மீண்டன. அவள் கண்கள் பிரகாசமடைந்தன. சிதளக் காற்றில்ை அலைக் கழிக்கப்ப்ட்ட முடிக் கற்றைகளை காதோரங்களில் ஒழுங்குபடுத் திக் கொண்டாள்; சேலையைச் சீர்செய்துகொண்டு, உதடுகளில் புன்னகையைச் சீராக வெளியிட்டா * அழகாகச் சம்மணம் கோலி உட்கார்ந்து கொண்டான். o அப்பொழுது அங்கு மாணிக்கம் வந்து நின்றன். "அந்தாலே அயித்தை மவன் வந்தாச்சு:. குளமங்கலத்து அயித்தை மகனைத்தான் சொல்லுறேனுங்க வாங்க இப்பிடிக் குந்துங்க! ...” என்ருள் அன்னம். அம்பலகாரர். பின்வசம் திரும்பி மாணிக்கத்தைப் பார்த் தார். மாணிக்கம் அப் பார்வையில் எதை அனுமானம் செய்து கொண்டானே? "அன்னம்: ஒடம்பு சீராயிடுச்சா?" என்று. மிகுந்த கவலையுடன் விசாரித்தான்.