பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

' 8ي தட்டுப் பலகையில் இருந்த இலங்கைச் சீமைப் பேழையில் வைத்துப் பூட்டிவிட்டு, கருவாட்டை மாத்திரம் தரையில் போட்டவாறு, கதவைத் திறந்தாள், அன்னக்கிளி. - உள்ளே நுழைந்த பொன்னத்தா "என்ன அக்கா செஞ்சே கதவை அடைச்சுக்கிட்டு?" என்று வி ைவிடுத்தாள். "இந்த பாரு, இதோட வாசனையிலே சொக்கிப் போயி ருந்தேளுக்கும்"என்று சொல்லி, கருவாட்டைக் காட்டினுள் அன் ாைக்கிளி; "இது எங்க அயித்தை மகன் அனுப்பிச்சதாக்கும்” என்றும் நினைவுபடுத்தினுள். பெருமை பிடிபட மறுத்தது. "நீங்க யோகம் செஞ்ச பொண்ணுச்சே! அதான். இப்பிடி வாய்ச்சிருக்குது. எங்களை ஒத்தவுகளுக்குக் கேட்டுமாவடிக் கரு வாடுதான் சாப்பிட வாய்க்கும்; ஒங்களுக்கோ அக்கரைச் சீமைச் சரக்கே தேடி வந்திருக்குது. ஒங்க அதிர்ஷ்டத்துக்கு அட்டி எது?” என்று புகழ்ந்தாள். பொன்னத்தா, இப்போது அன்னக்கிளி நயம் மலிந்த நளின நகை உதிர்த் தாள். "ம், நீ செப்புறதும் ஒரு விதத்துக்கு மெய்யானதுதான். ஏன்னு. இந்