பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 குளமங்கலம் மாணிக்கம் கோ ழி கூப்பிட எழுந்த அன்னக்கிளி, செல்லத்தேவன் ஊருணியில் குளித்து முழுகித் திரும்பிய நேரத்தில் அவளுக்குத் துணையாக இருந்தது விடிவெள்ளி, ஈரச் சுங்கடி சலசலக்க வந்துகொண்டிருந்தவள், அரச மரத்து நாகம்மாள் சிலையை மூன்று முறை வலம் சுற்றி வந்து, கல்குழியில் சேமித்திருந்த திருநீறு குங்குமத்தில் கடுகத்தன எடுத்து பொட்டிட்டுக் கொண்டு மீண்டாள். வடகிழக்கில் இருந்த பிரமர் சுவாமியை யும் அதற்கும் தென்மேற்கில் இருந்த தாராடியையும் நெஞ்சில் இருத்தி நேந்து' கொண்டபின், வீடு நோக்கி நடை தொடர்ந் தாள். - - காரைப்பத்தைகளை கடந்து வடபுலத்தின் சுருக்குப் பாதை பில் மறுகி நடந்த அவள் ஒருமுறை தும்மிஞள் முக்கை லேசாக உறிஞ்சிக் கொண்டாள். நெஞ்சகப் புள்ளிகளின் அணப்பில் இருந்து நழுவிய சின்னுளபட்டிச் சேலையை சரிக் கட்டிக் கொண்டு விரைவு பாய்ச்சி நடந்தாள். ஈரம் படிந்த குறுமனலில் அடிச்சுவடுகள் பதிந்தன. . . . . . . . . .” மன மிதித்த்தும், கால் மண்ணத் தட்டிக் கொண்டு திண்ணையில் இருந்த மூங்கில் தட்டியில் உலர்ந்து கிடந்த புடவை, ரவிக்கையை எடுத்துக் கொண்டு நடைக்குப் போளுள். அன்னக்கிளி. உறையூர் கொட்டடியும் தட்டுமறித்த புது ரவிக் கையும் பொலிய மீண்டாள். அவள் உள் பாவாடையை இழுத்துவிட்டவாறு கொசுவத்தை இறக்கிவிட்டு முன்ருகனத் முடிச்சை இறுக்கினுள் முதல்தரம் முடிச்சு விழ மறுத்தது. சுவ, ரில் பதிந்திருந்த கண்ணுடியில் முகத்தைப் பார்த்துக்கொண்டே