பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்னக்கிளி

105


'ஐயோ ஐயோ!' என்று புலம்பினாள் அன்னம். 'இது அநியாயமான பொய் என்பதை உங்கள் நெஞ்சே சொல்லும். வீணாக என்னைத் தண்டிக்காதீர்கள் அம்மா என்று கெஞ்சினாள்.

'உனக்கென்ன? நீ அழகு ராணி. உன்னைக் கண்டதுமே எல்லோரும் கிறக்கம் கொண்டுவிடுகிறார்கள், உன் மனசைக் கவர்ந்த எவனுக்காவது அந்த முத்து மாலையைக் கொடுக்க நீ ஆசைப்பட்டிருக்கலாம்...'

'பொய்! பொய்!' என்று கத்தினாள் அன்னக்கிளி.

'இன்று பொழுது போவதற்குள் அந்த முத்துமாலை என் கைக்கு வந்து சேரவேண்டும். அதுவரை நீ என் முகத்தில் விழிக்காதே, போ!' என்று எரிந்து விழந்த தலைவியின் பார்வையினின்றும் வேகமாக அகன்றாள் அந்தப் பேதை.

அமுதவல்லி படுக்கையில் சாய்ந்தாள். அவள் உள்ளத்தில் உணர்ச்சியின் குழப்பம். 'அந்த மாலை எங்கே போயிருக்கும்? அன்னம் எடுக்கவில்லை என்றால் வேறு யார் எடுத்திருக்கக்கூடும்?' என்று அவள் மனம் அசைபோட்டது.

அவளுக்குப் பிரியமான பூனைக்குட்டி ஒன்று வெளியேயிருந்து ஓடிவந்தது. விளையாட்டாக அது கண்ணாடி முன்னே தாவியது. கண்ணாடி இருந்த உயரமான இடத்தலிருந்து கீழே குதித்தது.

அதன் இயக்கங்களை நோக்கியவாறு சாய்ந்திரு அமுதவல்லியின் உள்ளத்திலும் அசைவுகள் கெளித்தன 'ஒரு வேளை இந்தப் பூனை அப்பொழுதும் வந்து, இப்படி