பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

அன்னக்கிளி


குதித்து விளையாடியிருக்குமோ? முத்துமாலையைக் கீழே தள்ளி இழுத்து எந்த மூலையிலாவது போட்டிருக்குமோ?'-இப்படி எண்ணம் எழவும் அவள் அவசரமாகத் துள்ளி எழுந்தாள். கீழே குனிந்து ஆராய்ந்தாள். அவள் ஏமாறவில்லை.

அந்த முத்துமாலை, வெளிச்சம் அதிகம் இல்லாத ஒரு இடத்தில், சுருண்டு கிடந்தது. அமுதவல்லி ஆனந்தத் தோடு அதை எடுத்துக்கொண்டாள். கண்களில் ஒற்றினாள். முத்தமிட்டாள். கழுத்தில் அணியாமலே மறைத்து வைத்தாள்.

'ஐயோ பாவம்! அன்னத்தை வெடுவெடு என்று கோபித்துக் கொண்டேனே. அவள் அழுது உருகிப் போவாளே! என்று அவளது உள்ளம் கசிந்தது.

'சரிசரி. அவள் ஒன்றும் வெல்லக்கட்டி இல்லையே, உருகிப் பாகாய் இளகிவிடுவாள் என்பதற்கு! அழட்டும் அழட்டும். அழுவதும் நல்லதுதான்!' என்று அவள் மனத்தின் ஒரு பகுதி பேசியது.

அமுதவல்லி சீக்கிரமே அன்னத்தை அழைத்திருப்பாள் அதற்குள் அவள் கவனத்தை ஈர்க்கும் வேறு நிகழ்ச்சிகள் குறுக்கிட்டுவிட்டன.

வெளியே பரபரப்பும் கூச்சலும் எழுந்ததை உணர்ந் தாள் அமுதம். தொடர்ந்து,ஓர் ஆள் அவள் முன் வந்து நின்றான் நடந்ததை அறிவிக்க.

தோப்பில் பதுங்கியிருந்தவன் பிடிபட்டான். அமுத வல்லி ஏற்பாடு செய்த ஆட்கள் அவன் வரட்டும் என்று